ஒரு கட்டிடத்தில் தேன் கூடு கட்டலாமா?

ஒரு கட்டிடத்தில் தேன் கூடு கட்டலாமா?

எனது வாஸ்து பயணத்தின் விளைவாக ஏற்பட்ட அனுபவ அறிவின்படி தேனீக்கள் கூடு கட்டுவதற்கும் ஆண் மனித வாழ்க்கைக்கும் மிகநெருங்கிய சம்பந்தங்கள் இருக்கிறது.
தேனிக்கள் எப்போதும் மிக உயர்ந்த கட்டிடங்களில் தேன்கூடுகளை கட்டும். அப்படி கட்டக்கூடிய இடங்கள் பொது இடங்களாக இருக்கும் பட்சத்தில் மிகப்பெரிய பாதிப்புக்களை அங்கு வேலை சார்ந்த நிகழ்வுகளில் இருக்கும் மனிதர்களை பாதிக்காது.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் மிகப்பெரிய வியாபாரஸ்தலங்கள் மற்றும்,
அப்பார்ட்மெண்ட் கட்டிடங்கள்,

உறவுகளில் பாகப்பிரிவினை சண்டை காரணமாக யாரும் உபயோகிக்காது இருக்கும் பெரிய கட்டிடங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் உபயோக படுத்தாது இருக்கும் இடங்களில் தேனிக்கள் கூடு கட்டும். மற்றும் மலைகளின் சந்து போன்ற பகுதிகளில் கூடு கட்டும்.

உயரமான மரங்கள் மற்றும்,
சூரிய ஒளிகீற்று படாத இடங்கள்.
ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடங்கள், மனிதர்கள்தொந்தரவு இல்லாத இடங்கள் .
மிக மிக சுத்தமான இருக்கும் இடங்கள். இப்படி மேற்கூறிய இடங்களில் கூடு கட்டும் போது எவ்விதமான பாதிப்புக்களையும் வழங்காது.
ஆனால் ஒரு குடியிருக்கும் வீட்டில் தேனிக்கள் கூடு கட்டுகிறது என்றாலே அங்கு ஆண்கள் பாதிக்கும் சூல்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .ஆக உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், அந்த இடங்களில் ஆண்களின் ஆதிக்கம் வீழ்ச்சியடைகிறது.பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த இடம் கடனால் பாதிக்கும் சூல்நிலைக்கு தள்ளப்படுகிறது.

பெண்கள் ஆதிக்கம் அதிகமாகி விடுகிறது. அதிக இடங்களில் பெண் சொத்தாக மாறி விடுகிறது.
தேன்கூடுகளை வளர்க்கும் தொழில் செய்யும் இடங்களில் அக்குடும்பத்தில் யாராவது ஒருவர் கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டு பெரிய சோடாப்புட்டி கண்ணாடி போடும் நிலை ஏற்படும். அல்லது நிரந்தர கண் பார்வை குறைபாடு சூல்நிலைக்கு அக்குடும்பத்தில் இருக்கும் எதாவது ஒரு நபருக்கு ஏற்பட்டு விடுகிறது.
நம் இல்லத்தில் பறவைகள் கூடுகட்டும்போது இதுபோல பல பாதிப்புகள் வரக்கூடும். ஆகவே பறவைகள் இருக்கலாமா என்பதனை யோசித்து முடிவு செய்வது நல்லது. அதேபோல தேனிக்கள் வளர்ப்பு என்கிற விசயத்தில் கூட மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு தேனி வளர்ப்பு தொழிலை செய்ய வேண்டும்.

ஆண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பது மற்றும்,
குழந்தை பிறப்பு தள்ளிபோகுதல்.ஆண் குழந்தைகள் பிறக்காது போவது,
ஆண்கள் தொழில் மூலமாக பணத்தை இழந்து இதனால் வறுமை, கடன்சுமை ஏற்பட்டு விடுவது.ஆண்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு வாழ்க்கை முழுவதும் மனநல மருத்துவர் வசம் வாழ்வது.
கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி வீட்டை விட்டு கணவனை பிரிந்து போகச்சொல்வது
வங்கி கடன் காரணமாக சொத்து ஜப்தி நிலைக்கு போகும் அளவிற்கு கடன்சுமை ஏற்பட்டு விடுவது. இப்படி பலவிதமான விளைவுகளை தேனி வளர்க்கும் இடங்களும்,தேனிக்கள் தானக வளரும் இடங்களிலும் நடக்கும்.