ஒரு இல்லத்தில் மரணத்திற்கு சமமான விபத்து நடந்து உள்ளதா?

அடிக்கடி #விபத்து நடக்கின்றதா ? பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்கிற வார்த்தைகள் உங்கள் இல்லத்தில் இருக்கிறவர்களுக்கு பொருந்துகிறதா?. நீங்கள் என்ன நினைப்பீர்கள் . இது உங்கள் விதி. உங்கள் நேரம் என்று நினைப்பீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது கிடையாது என்றுதான் சொல்லுவேன். இந்த இடத்தில் வாஸ்துவின் ரீதியாக வடமேற்கு தவறுகள் என்பது விபத்திற்கு காரணமாகிறது. மிகப்பெரிய வாஸ்து தவறுகள் இருக்கின்ற பட்சத்தில் வடமேற்கு தவறான பார்வையில் இல்லம் இருக்கின்ற பட்சத்தில் நிச்சயமாக விபத்து சார்ந்த கஷ்டங்களைக் கொடுக்கும்.

அதேபோல மனையடி ஆயாதி குழிகணக்கு பொருத்தத்தில் மரணயோகம் அல்லது, மரண சூத்திரம் போன்ற பலன்களை கொடுக்கும் அளவு புள்ளிகளில் வருவது போல
இருந்தாலும் மரணத்திற்கு சமமான,மிகப்பெரிய பாதிப்பான விபத்துக்களை கொடுக்கும். ஏன் மரணம் சம்பந்தமான தீவிபத்துக்களைக் கூட ஒரு இல்லத்தில் ஏற்படுத்தலாம்.எனது பயணத்தில் மரணம் நடந்து, அது சம்பந்தப்பட்ட வீடுகளை அளந்து பார்த்த வகையில் மரணயோகம் மற்றும் மரணசூத்திரம் அளவுகளாக இருந்த இல்லங்களில் மரணம் சார்ந்த பாதிப்பு நடந்து இருக்கிறது. இந்த இடத்தில் வாஸ்துவின் ரீதியாக வடமேற்கு மற்றும்,மனையடி ஆயாதி குழிகணக்கு வழியாக மரணயோகம் மரண சூத்திரம் இல்லாத இல்லமாக இருப்பது நல்லது.