PLOT FOR MALE AND PLOT FOR FEMALE vastu

ஒரு இடம் ஆண் மனையா அல்லது பெண் மனையா?

PLOT FOR MALE AND PLOT FOR FEMALE vastu
PLOT FOR MALE AND PLOT FOR FEMALE vastu

ஒரு இடம் ஆண் மனையா அல்லது பெண் மனையா?

ரு காலிமனை என்பது சிறியதாக அரை கிரவுண்ட் இருக்கிறது அல்லது பெரிய இருபது சென்ட் இடமாக இருக்கிறது என்பது பற்றி வாஸ்து ரீதியாக தவறாக இருக்குமோ என்று நினைக்க தேவையில்லை. ஆனால் அந்த மனை ஆண்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் தன்மையுள்ள மனையா, அல்லது பெண்கள் தங்கள் திக எண்ணிக்கையில் வசிக்கும் மனையா என்பதுபற்றி பார்க்க வேண்டும்.
இந்த உலகில் உள்ள அதிகபட்ச அறிவுள்ள உயிரினமாக மனித உயிரினத்தில் ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் இருக்கிறது.. அதேபோல ஐந்தறிவு உள்ள உயிரினங்களான, விலங்குகளில் ஆண் பெண் தெரியும்.  அதே போல மனிதர்கள் வீடு கட்டி வசிக்கப்போகும் மற்றும் வசித்துக்கொண்டிருக்கும் மனையிலும், ஆண் பெண் என்று இருக்கின்றதா என்றால், என்னைப்பொறுத்தவரை இருக்கிறது என்றுதான் சொல்லுவேன்.
எனது வாஸ்து அனுபவத்தில் இதுபோன்ற ஆண் மற்றும் பெண் மனைகளில் வசிக்கும் மக்களைப் பார்த்துள்ளேன். கிழங்கு மற்றும் மேற்கு அதிக நீளமாக உள்ள மனைகளில் வசிக்கின்ற நபர்களை பார்க்கும் போது அதிக எண்ணிக்கையில் ஆண்களாக உள்ளனர்.இதில் மாற்றம் ஏற்பட்டு அங்கு பெண்கள் அதிகமாக இருந்தாலும்,அவர்களால் வெற்றி என்பது கொஞ்சம் கடினமாகி விடுகிறது. ஆக இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது ஒரு சிறிய மாற்றம் ஏற்படுத்தி கொடுக்கும் போது,அவர்களும்,வாழ்வில் அடுத்த கட்ட பயணம் செய்ய முடியும்.

 

ஆண் மனை பெண் மனை
ஆண் மனை பெண் மனை

இதேபோல தெற்கு வடக்கு நீளம் அதிகமாக இருந்து,மேற்கு மற்றும் கிழக்கு குறைவாக இருக்கும் போது,அந்தமனை என்பது பெண் மனை என்கிற அமைப்பில் வந்துவிடும்.அப்படிப்பட்ட இடங்களில் அந்தவீட்டில் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் போது,அந்த வீட்டில் வாழ்வில் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழமுடியும். அதுவே முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் போது அது பெண் மனையாக இருக்கின்ற காரணத்தால் ஒரிரு பெரிய பாதிப்பை கட்டாயமாக கொடுக்கும். இந்த மாதிரியான இடங்களில் நான் ஒரு சிறிய மாற்றத்தை சொல்லி அதனை அந்த மனையில் வசிப்பவர்கள் செய்யும் போது,மிகச்சிறந்த வாழ்க்கை வாழ முடியும்.ஆக ஆண் மனையில் பெண்களும்,பெண் மனையில் ஆண்களும் வாழமுடியும். ஆனால் அந்த வீடு மற்றும் மனை வாஸ்து விதிகளுக்கு உட்பட்டும்,ஆயாதி மனையடி சாஸ்திர கணிதத்திற்கு பொருந்தியும் இருக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)