ஆயாதி பொருத்தம்

ஒருவர் வாங்கக்கூடிய இடம் யாருடைய பெயரில் வாங்குவது

chennaivasthu
chennaivasthu
ஒருவர் வாங்கக்கூடிய இடம் யாருடைய பெயரில் வாங்குவது சிறப்பு என்பதை பற்றி பார்ப்போம்.
நாம் வாங்கிய இடம் அல்லது வாங்கக்கூடிய இடம் யாருடைய பெயரில் வாங்க வேண்டும். ஆண்கள் பெயரில் வாங்கினால் என்ன நன்மை தீமைகள். பெண்கள் பெயரில் வாங்கினால் என்ன நன்மை தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம்..
பூமி என்பது பெண். சூரியன் என்பது ஆண் . இரண்டும் சேரும் போதுதான் இந்த பூமியில் மனித  உயிரினங்கள்  ஆரோக்கியமான முறையில்பிறந்து வாழ முடியும்.
ஆனால்  நாம் வாங்கக்கூடிய இடம் என்பது  வாஸ்து விதிகளின்படி ஆண்களுக்கு உரிய இடமென்றும் பெண்ணுகளுக்கு உரிய இடமென்றும் உண்டு. அதை தெரிந்து வாங்குவதே மிக மிக சிறந்த முடிவு ஆகும்.
வடக்கு கிழக்கு ரோடு அமைப்பு மனைகள் அனைத்துமே ஆண்கள் பெயரில் வாங்குவது மிக நல்ல பலனை தரும். அதுவும் அந்த வீட்டில் முதல் வாரிசு பெண் குழந்தையாக இருந்தால் சகல ஐஸ்வர்யத்தையும் தரவல்லது. இதுபோன்ற ரோடு அமைப்புகள் எக்காரணம் கொண்டு பெண்கள் பெயரில் வாங்குவதை தவிர்த்தல் நல்லது. அதனால் பெண்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
கிழக்கு மேற்கு நீளமான  அமைப்பு உள்ள இடம் எப்பொழுதுமே ஆண்கள் பெயரில் வாங்குவதுதான் சிறப்பு. அதுவும் ஒன்று,இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தைகள் மட்டும் உள்ளவர்கள் மட்டுமே பெண்கள் பெயரில் வாங்க வேண்டும்.. இதுபோல அமைப்புகளில் வசித்தாலோ அல்லது வாங்கினாலோ மிக மிக சுபிஷ்ச்சமான வாழ்க்கையை வாழ முடியும்.
இதுபோல அமைப்புகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தொழில் செய்யும் மனிதர்களாக இருக்கிறார்கள். அரசாங்க சம்பளம் வாங்குபவர்கள் அதிகம் வசிப்பது வேறு அமைப்பாக இருந்தால் மட்டுமே நடக்கும். இது போல தென் கிழக்கு ரோடு அமைப்பு உள்ளவர்களே. தென் கிழக்கு ரோடு அமைப்பு மற்றும் வடமேற்குமூலையில் சாலைகள் இருந்தால் பெணகள் பெயரில் வாங்க வேண்டும்.அப்படி மாற்றி  வாங்கும் பட்சத்தில் அவர்கள் அதிகப்படியான நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆண்கள் அந்த குடும்பத்தை விட்டு கூட வெளியேறி விடுகிறார்கள். உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
தெற்கு மேற்கு ரோடு அமைப்புகள் உள்ள இடம் ஆண்கள் பெயரில் அமைவது மிக மிக சிறப்பு. இதுபோல உள்ள இடங்களில் உள்ள ஆண்கள் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார்கள். கோடீஸ்வராகவும் தொழிலதிபராகவும் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். இதுபோன்ற தெற்கு மேற்கு ரோடு உள்ள இடத்தை பெண்கள் பெயரில் வாங்குவது தவறு. அதனுடைய பாதிப்பு பெண்களுக்கே இருக்கும். அதிகப்படியாக குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும்.
வடக்கு மேற்கு ரோடு அமைப்பு இடத்தை பெண்கள் பெயரில் வாங்குவது சிறப்பு. இதுபோல இடத்தில் இருப்பவர்கள் ஆண் பெண் இருவருமே கலைகளை கற்றுணர்ந்தவர்களாக இருப்பார்கள். மிக ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். புத்தியுடையவர்களாக இருப்பார்கள். பிரபலமானவர்களாகவே இருப்பார்கள்.
ReplyForward
error: Content is protected !!