ஒருவர் பிறந்த தமிழ் மாத பலன்கள்]

ஒருவர் பிறந்த தமிழ் மாத பலன்கள்

தமிழ் மாத பலன்கள்

ஜோதிடத்தின் மூலமாக ஒருவர் பிறந்த தமிழ் மாதத்தினை வைத்து, அவர்களுக்கான குணநலன்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.அந்தவகையில் சில பலன்களை பார்ப்போம்.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் நினைத்த காரியத்தை சாதிக்காமல் விட மாட்டார்கள். இவர்கள் வேலை செய்யும் துறையில் சிறப்பாக இருப்பதால், பலரது பகையை சந்திப்பார்கள்.காரணம் சூரியன் மேசத்தில் இருக்கின்ற காரணம் ஆகும்.
இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிகவும் அதிகமாக வரும். ஆனால் அந்த கோபத்தை கட்டுப்படுத்தினால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். வாழ்க்கையில் பல துன்ப இன்பங்களைப் பெறுவார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டார்கள்.

இம்மாதத்தில் பிறந்தவர்கள் கையில் பணம் நிற்காது. வரவு அதிகரிக்க, செலவும் அதிகரிக்கும். இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிக்க பிடிக்காது. இருப்பினும் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள்.பணம் சார்ந்த விசயத்தில் கட்டுபாடுகள் இருந்தால் வெற்றி உறுதி.

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். இவர்கள் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி கொண்டவர்கள். வாழ்வில் முன்னேற துடிப்பவர்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள்.
இம்மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் மற்றும் மிகுந்த கோபம் கொள்பவராக இருப்பார்கள்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட்டு, அதற்கான செயலில் ஈடுபடுவதில் சிறப்பானவர்கள்.
ஆனால் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு பிடித்தவர்கள் ஏதேனும் தீங்கு செய்துவிட்டால், வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் விரக்தி அடைந்து விடுவார்கள்.

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் சுய தொழில் செய்ய விரும்புவார்கள். எதையும் உடனடியாக செய்து முடிக்க நினைப்பார்கள்.இம்மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் பணக்காரராகலாம். இவர்கள் மிகுந்த சிக்கனமாக இருப்பார்கள் மற்றும் இவர்களுக்கு கடன் வாங்க பிடிக்காது.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் செல்வந்தராக வாழப் பிறந்தவர்கள். இவர்களின் வேகமான முன்னேற்றத்தைக் கண்டு பலர் பொறாமைக் கொள்வார்கள்.இவர்களை தொழில்ரீதியாக வெற்றிப் பெறுவது என்பது முடியாத காரியம். நன்கு படிப்பார்கள். மிகுந்த புத்திசாலி. ஆனால் சந்தேக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இவர்கள் எப்போதும் பெரிய திட்டங்களையே தீட்டுவார்கள்.இவர்கள் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட மாட்டார்கள். அதிகம் உணர்ச்சிவசம் கொள்வார்கள்.

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பர். இம்மாதத்தில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அதனால் ஆத்திரமடைந்து செய்யக் கூடாத பல செயல்களை செய்ய துணிவார்கள்.

மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க விரும்புவார்கள். செய்யும் காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள்.ஆனால் ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால், இவர்கள் பிற்காலத்தில் அதிக சிரமத்தை சந்திப்பார்கள்.

தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். எதிலும் வருமானம் வருமா என்று யோசித்தே செய்வார்கள்.
இம்மாதத்தில் பிறந்தவர்கள் மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது.

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். இவர்களிடம் யாரும் எந்த ஒரு உண்மையையும் மறைக்க முடியாது. எதை எப்போது செய்தால் நன்மை கிட்டும் என்பதை நன்கு அறிந்து காரியத்தை செய்வார்கள்.
இவர்கள் அனைவரருடனும் சகஜமாக பழகுவார்கள். இதனால் இவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பார்கள்.

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் அதிக மன கஷ்டங்களைச் சந்திப்பதால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள்.இவர்களுக்கு முன்கோபம் அதிகம் வரும். சிற்பக்கலையில் அதிக ஆர்வம் இருக்கும். இம்மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் பொய் சொல்வார்கள்.இதனை மாற்றும் போது வெற்றி உறுதி.

error: Content is protected !!