ஐப்பசி_அன்னாபிஷேகம்

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,அஹமன்னம், அஹமன்னதோ” என்றுகூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அன்னம்தான் உலகில் வாழும் அனைத்துஜீவராசிகளுக்கும் உயிர்நாடி.உலக வாழ்கைக்கு அச்சாணி. #அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானேகாசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

 

 

அந்த இறைவனின் அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் #அன்னாபிஷேகம். #ஐப்பசி மாதப் பௌர்ணமி.தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

 

அன்னாபிஷேக தரிசன பலன்: அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொருபருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடிசிவதரிசனம் செய்வதற்கு சமம்.சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 16பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம்.சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.🌞ஆகமத்தில் அன்னாபிஷேகம்:🌞ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்றுஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க உரிய பொருளால் சிவபெருமானைவழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே #அஸ்வினி நட்சத்திரத்திற்குரியஅன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு #ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

 

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் #தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த #நெல்அரிசியாகின்றது. #அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும்#பஞ்ச_பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் #ஆண்டவன் மேனிமுழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம்ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன்.இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் #பார்வதி_தேவி முடிவு செய்கிறார்.

 

மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய உணவு வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன்.தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை #எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி.கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் #சிவன். அந்த லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும்.

 

 

கோவில்களிலும், இல்லங்களிலும் லிங்கத் திருமேனி மூழ்கும் வண்ணம் சூடாறிய வெள்ளை அன்னத்தைக் கொட்டி மூடி, வெந்த காய்கறிகள், பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றை அடுக்கி லிங்க முகத்தையும் அழகுபடுத்துவார்கள்.ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் #பேரூர்_புராணம் தெரிவிக்கிறது. எனவே இந்த அன்னாபிஷேக சிவனை ஒரு முறை தரிசித்தால் கோடி சிவ தரிசனம் செய்த பலன் ஏற்படும் என்பது ஐதீகம். இந்த அன்னச் சிவரூபத்திற்கு தீபாராதனை காண்பித்த பின்னர், சிவன் மேல் பூசிய அன்னம் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படும். வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால், இந்த அன்னப் பிரசாதம், #சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.திருக்கோயில்களில் நடத்தப்படும் #அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, விசேஷ ஹோமங்கள், நித்ய ஹோமங்கள், வேத பாராயணம், தீபாராதனை என அனைத்தும் ஆகம வழிப்படிதான் நடத்தப்படுகின்றன. அபிஷேகப் பிரியனான சிவனுக்குப் பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி எழுபது வகையான அபிஷேகப் பொருட்களில் ஒன்று அன்னம். அன்னத்தால் அபிஷேகம் செய்தால் #சாம்ராஜ்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

🔯 #

நடக்கும் முதன்மை ஆலயங்கள்.

 

🔯#தஞ்சாவூர்_பிரகதீஸ்வரர்_திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம். இந்த அபிஷேக அன்னத்தில் பாதி பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். மீதி நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக்கப்படும்

 

.ஐப்பசி அன்னாபிஷேகம் நடக்கும் இரண்டாவது ஆலயமாக#கங்கை_கொண்ட_சோழபுரம் விளங்குகிறது.தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.ஆக இந்த இரு ஆலயங்களும் ஐப்பசி அன்னாபிசேகம் சிறப்பு.வருடாவருடம் கங்கை கொண்ட சோழபுரத்தில் காஞ்சிமடத்தின் சார்பில், #ஐப்பசி_பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூட்டை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.

 

 

தமிழகத்தில் உள்ள அனைத்து சிவ ஆலயங்களிலும் இந்த அன்னாபிஷேக நிகழ்வு நடக்கும். ஆகவே இந்தநிகழ்வுகளில் கலந்து கொண்டு இறையருள் பெறுங்கள்.அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதனை சாப்பிட்டால் குழந்தை பிறப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.🐜🐜#சிற்றெறும்பு முதல்குஞ்சரக் கூட்ட முதலான தவகோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினைகுறையாமலே கொடுக்கும் அந்தசர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில்வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்தஅற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, வாழ்வில் உன்னதமான நிலையில் வாழ்வோமாகுக.

 

vastu bhagwan,
vastu consultant,
vastu compass,
vastu consultant in chennai,
vastu colours for kitchen,
vastu compliant ,
vaastu chart,
vastu chakra
vastu colours for kitchen cabinets,
vastu colors for hall, vastu dosh,
vastu direction,
vastu dimensions
vastu dates in 2018 ,
vastu day,
vastu dosh nivaran,
vastu dosh remedies for toilet,
vastu diagram,
vastu effects of south facing house,
vastu expert,
vastu east facing house ,
vastu effects of north facing house,
vastu experts in chennai,
vastu sevakar,
error: Content is protected !!