ஏன் சதுரம் அல்லது செவ்வக அமைப்பில் வீட்டின் இடங்கள் இருக்க வேண்டும்?

 வாஸ்துவில் திசைகளும் அதன் வேலைகளும்

vastu remedy for north west extension
vastu remedy for north west extension

ஒரு இடத்தில் எட்டு திசைகளும் எட்டு வேலைகளை செய்யும். அந்த வகையில் ஒரு  இடத்தில்  ஒரு மூலை குறைந்தால், அந்த குறையும் பகுதி பலம் இழந்து விடும். அந்த வகையில் வடகிழக்கு பகுதி வாஸ்து ஆற்றல் குறையும் போது அங்கு வசிப்பவர்களுக்கு,அறிவு சார்ந்த நிகழ்வுகளில் குறைபாடு, சுவாசம் சம்மந்தப்பட்ட உடல்நிலையில் மாறுபாடு, ஊனமுற்ற மனநலம் பாதித்த மற்றும் இதயம் சம்மந்தப்பட நோய்கள், புற்று நோய்,நிலையற்ற வேலைவாய்ப்பு, மந்த நிலையில் ஆனால் பெற்றோருக்கு அடங்காத குழந்தைகள், விபத்துகள் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் இடங்களாக மாறிவிடும்.

  வாஸ்துவில் வடகிழக்கு என்பது இறைசக்தி உள்ள நுழையும் அமைப்பாக எப்பொழுதும் நாம் பார்க்க வேண்டும். எளிதில் பாதிக்ககூடிய தலைப்பகுதி போன்றதே வடகிழக்கு பகுதி ஆகும். எப்படி ஒரு மனிதன் தன் மூக்கின் மூலமாக சுவாசித்து உயிர் வாழ்கின்றானோ அதுபோல ஒரு மனை உயிர் வாழ வடகிழக்கு அவசியம். அந்தவகையில் வடகிழக்கில் இருந்து பிரபஞ்ச சக்தி உள்ளே நுழைகிறது. எனவே அந்தப்பகுதியில் மூடப்படாமல் அதிக இடங்கள் இருக்கும் அமைப்பில் கட்டிடங்கள் அமைய வேண்டும்.

  

  வடகிழக்கில் அதன் பிரபஞ்ச சக்தியை குறைக்கும் அமைப்புகளான,மாடிப்படிகள்,தரைத்தளமோ,வீட்டின் உள்தளமோ உயர்ந்து இருத்தல் மிகப்பெரிய தவறுகள் ஆகும்.எந்த ஒரு இடத்திலும் நான்கு மூலைகளும் நான்கு திசைகளும் வாஸ்து விதிகளுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். ஆப்படி இல்லாமல் போனலும் வடகிழக்கு மிகப்பலம்பொருந்திய அமைப்பில் இருக்கும் போது பெரிய பாதிப்புகளில் மாட்டிக்கொள்ளாத வாழ்க்கை வாழ்வார்கள். 

  படத்தில் காட்டியுள்ள அமைப்பில் இடம் இருந்தால் அதன் ஒருதிசைப்பகுதி குறைந்து ஒருதிசை வளர்ந்து விடுகிறது. எனெனில் மூலைப்பகுதி மட்டுமே  வாஸ்து ஆற்றலை பெருக்கும்.ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு ஆற்றல் செல்வது தடைபடும்.இதனால் இரண்டு மூலை பகுதிகளுமே தெரிந்தோ தெரியாமலோ பாதிப்படைகின்றன. இதனால் அந்த திசையின் வேண்டாத விசயங்கள் வளர்ந்து  அங்கு வசிப்பவர்களுக்கு வாழ்க்கை கசந்து விடும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com