ஆயாதி பொருத்தம்

வாஸ்து குற்றம் நீங்க தீர்க்க எளிய பரிகாரங்கள்

chennaivasthu
chennaivasthu
வாஸ்
து குறறம் வாழ்க்கையை  கஷ்ட படுத்தினால்  தீர்க்க எளிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
 இல்லத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால், கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேலையில் முழு  பரங்கிக்காய் சுற்றி திருஷ்டி கழிக்க
செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும்.
நல்ல சம்பாத்தியம் இருந்தும்
பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை
வேளையில் பறவைகளுக்கு உலர்ந்த திராட்சை  மற்றும் நிலக்கடலை வைக்க
வீண் விரயம் கட்டுப்படும்.
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம்,
சோர்வு போன்றவை
நாள் முழுதும் இருப்பின்
இரவு படுக்கும் பொழுது
தலைக்கு அருகில் உப்பு வைத்து
கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். உப்பை செடிகளில் உரமாக கொட்டி விட வேண்டும். அல்லது ஆற்றில் கரைத்து விடலாம்.
 தேவையில்லாத பய உணர்வு
இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் வெள்ளி
ஸ்டீல் வளையம் ஒன்று
மாட்டி வர பய உணர்ச்சிகள்
குறையும்.
  வாழ பிடிக்காதது
போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் சனி விரலில் ஒரு குண்டுசி கொண்டு ரத்தம் வர குத்தினால்
அதாவது சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற
ஆரம்பிக்கும்.வாகனங்களில் எழுமிச்சை மற்றும் மிளகாய் கட்டி கொண்டு செல்ல விபத்துக்கள்
ஏற்படாது.காலை எழுந்ததும் தங்க
நாணயம் அல்லது
தங்கங்கள் நிறைந்த
படம், ரூபாய் நோட்டுகள்
நிறைந்த படம் ஒன்று
பார்த்து வர செல்வ வளம்
பெருகும்.இடது கை கீழே
இருக்கும் படி படுத்துறங்க அதிஷ்டம் பெறுகும்.
வீட்டில் வடக்கு கிழக்கு பாதிப்பகுதியில் நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.
காரணமில்லாமல் இரவில்
குழந்தைகள் தூங்காமல்
அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை
வைக்க, குழந்தை நன்றாக
தூங்கும்.
சமையலறையும், படுக்கையரையும் அருகருகே  அல்லது நேரெதிராக
இருக்கும் படி அமைத்து
கொண்டால் தம்பதியர்
ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.துர் சக்திகள் நம்மை
அண்டாதிருக்க வீட்டு
வாசலில் மாங்கொத்துக்களை
தொங்க விட
வேண்டும்.