எனது வாஸ்து அனுபவங்கள்.

எனது வாஸ்து அனுபவங்கள்.

எனது வாஸ்து அனுபவங்கள்.
எனது வாஸ்து அனுபவங்கள்.

எனது வாஸ்து அனுபவங்கள்.

சின்ன சின்ன வாஸ்து ‘
சமிபத்தில் வாஸ்து பயணமாக தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மாவட்ட தலைநகரில் வாஸ்து பார்பதற்கு சென்றிருந்தேன்.என்னை வாஸ்து பார்ப்பதற்கு அழைத்த மாமனிதர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையில் அங்குள்ள சொந்த வீட்டில் வசித்து வருபவர் ஆவார். நான் வாஸ்து பார்பதற்கு சென்ற  தமிழ்நாட்டில் உள்ள  வீட்டை கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு பிராமண நண்பர் கட்டிக்கொண்டு இருக்கும் போதே நிறைவடையாத வீட்டை வாங்கியவர் ஆவார்.
ஆனால் எனது வாஸ்து விதிகளின்படி மூன்று மாதங்களுக்கு மேலாக ஒரு இல்லத்தில்  குடும்பத்தோடு தங்கி உண்டு உறங்கி உறவாடி வாழும் போது மட்டுமே  ஒரு வீடு என்பது அதன் வேலையை  அது நல்லதாக இருந்தாலும் அல்லது தவறான வாஸ்து பலனாக இருந்தாலும் தீவிரமாக செய்யும்.
அந்த வகையில் என்னை வாஸ்து பார்பதற்காக அழைத்த  வயதில்  மூத்த பெரும்மனிதர் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு மேலாக அந்த வீட்டில் தங்க வில்லை.அவர் எப்போது தமிழகம் வந்தாலும் அவரின் மற்றொரு ஒரு சிறிய அமைப்பாக உள்ள வீட்டில் தான் தங்குவார்கள். அது இரண்டு மாடிகளை கொண்ட வீடு.இந்த கட்டிடத்தில் மேலும் தற்போது அமைச்சராக இருக்கின்ற ஒருவர் இங்கு குடியிருக்கும் போது அமைச்சரானவர்.

 

அதுபோக மேலும் ஒரு பல வீடுகளை கொண்ட காம்ளக்ஸ் அமைப்பு உள்ள ஒரு முறை இல்லமும் அவருக்கு உண்டு. அந்த வீட்டில் இன்றும் தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் குடி இருக்காமலேயே அவர் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்த பின்னர் அமைச்சர் ஆன காரணத்தால்  வாடகை கொடுத்து கொண்டு தனது கஸ்டடியில் அந்த இல்லத்தில் வசித்து வருகிறார். வாரம் ஒரு தடவையோ அல்லது நேரம் கிடைக்கும் போது அந்த இல்லத்தில் தங்குகின்றார்.
இது ஒருபுறம் இருக்க எந்த வீட்டில் அதிக நாட்கள் தங்காமல் இருந்தாரோ அந்த வீட்டில் தனது மகளின் திருமணம் சார்ந்த நிகழ்வுக்காக அதிகபட்சமாக தங்கக்கூடிய சூல்நிலை அமைகிறது. அப்போது அவருக்கு ஒருசில அமானுஷ்ய எண்ணங்கள் வருகிறது. அவரின் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இந்த வீட்டில் எதாவது பில்லி சூனியம் ஏவல் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் ஒருசில சாமியார்கள் வருகிறார்கள். அவர்களும் ஒருசில விசயங்களை செய்து விட்டு பணத்தை அவரிடம் இருந்து வாங்கி செல்கின்றனர்.என்னை வாஸ்து பார்க்க அழைத்த மாமனிதருக்கு செய்வினை மற்றும் சூனியம் எடுப்பதற்கு ஆள் உண்டு ஆனால் வைப்பதற்கு ஆள் இல்லை என்கிற விசயம் தெரியாது பணத்தை பல ஏமாற்று போலி சாமியார்கள் வசம் இழந்து விட்டு என்னை அழைக்கின்றார்.
அந்த இடத்திற்கு நான் சென்ற உடனே உங்கள் வீட்டில் ராகு திசையோ அல்லது சுவாதி மற்றும் திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரங்கள் சார்ந்த மனிதர்கள் இருக்க வேண்டும் என்ற பதிவை சொல்லி விட்டு நீங்கள் உடனடியாக இந்த இல்லத்தில் இருக்க வேண்டாம். உடனடியாக விற்பனை செய்து விடுங்கள் என்கிற பதிவை சொல்லி விட்டு கிளம்பி வந்தேன். மீண்டும் அவர்களிடம் இந்த இல்லம் ஆண்களை தனிமை படுத்தக்கூடிய செயலை செய்யும். உங்கள் நேரம் நன்றாக இருக்கின்ற பட்சத்தில் கணவன் மனைவியை பிரித்து வைத்து வாழ வைக்கும். அல்லது நேரம் மோசமாக இருக்கின்ற பட்சத்தில் வீட்டில் இருக்கும் பெண்களின் உயிர் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கும். ஆகவே உடனடியாக இங்கு இருந்து போர்கால அடிப்படையில் வெளியேறி விடுங்கள் என்று சொன்னேன். அவர்கள் இன்னும் ஒருமாதம் இருந்து விட்டு போகலாமா? என்று கேட்டார்கள். அதற்கு எனது பதிலாக  எப்போ போகவேண்டும் என்று கேட்டிருந்தால்   எனது பதில் நேற்றே போயிருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பி வந்தேன்.

enior Vastu consultant & founder,vastu shastra, vastu consultant in trichy, online vastuconsultant in usa

error: Content is protected !!