எட்டி பழுத்தென்ன? ஈயாதார் செல்வம் இருந்தென்ன?

ஆன்மீக இரகசியம்:

எட்டி பழுத்தென்ன? ஈயாதார் செல்வம் இருந்தென்ன? என்று அவ்வையார் பாடி சென்றுள்ளார். எட்டிப் பழத்தை எந்த பறவையும் உண்ணாது ..அவ்வளவு கசப்பு ஆனால் பிளாக் ரோவர் என்று சொல்லக்கூடிய கரிச்சான் குருவி என்கிற வாலாட்டி குருவி விரும்பி சாப்பிடும் .நல்ல பாம்புக்கு ஆகாது, பேய்க்கு மரணம், பிசாசுக்கு மரணம் என்று பழந்தமிழ் மருத்துவ நூல்கள் கூறுகின்றன . இந்த மரத்தில் காளி வசிப்பதாகவும், எந்த தெய்வமும் இந்த மரத்திடம் வராது எனவும்,அளவோடு உண்டால் எந்தவிதமான எதிர்மறை சக்திகளும் நம்மிடம் அண்டாது .ஆனால் நாட்டு மருத்துவர் பரிந்துரையின் பேரில் தான் உண்ண வேண்டும். ஹோமியோபதி மருத்துவத்தில் இந்த மரத்தை நக்ஸ்வாமிகா என்று அழைக்கின்றனர் மற்ற மருந்துகளின் விஷத் தன்மையை நக்ஸ்வாமிகா முறிக்கும். இன்றும் மத்திய பிரதேச உஜ்ஜயினி மாகாளி கோயில் சுடுகாட்டு பிணத்தின் சாம்பல் தான் பிரசாதம். அதிலிருக்கும் விஷத்தன்மையை முறிக்க எட்டி குச்சி தான் கலக்கின்றனர்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அமுதத்துடன் ஆலகால விஷமும் வெளிவந்தது. அந்த ஆலகால விஷத்தால் உலக மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக சிவனே உண்டு, திருநீலகண்டன் ஆனார். அந்த ஆலகால விஷத்தின் அடையாளம் நான் எட்டி என்கிறது புராணக் கதை. ஆக எட்டி கிட்ட இருந்தால் எதிர்மறையான சக்திகள் எட்டி நிற்கும்.

வாஸ்து ரகசியம்:

ஒரு கோயில் என்பது இயற்கையாகவே காரண காரியங்களால் உருவாக்கப்படுகின்றது. அந்தவகையில் ஒரு ஊரில் இருக்கும் ஆலயங்கள் சார்ந்த வாஸ்து ரீதியான தவறுகள், அந்தக் கோயிலின் அறங்காவலர் அல்லது நிர்வாக தலைவர் குடும்பத்தில் பாதிப்பை தரும்..கோயில் அருகில் இருக்கும் வாஸ்து பாதிப்புகள் குறிப்பாக, ஆலயத்திற்கு அருகே தென்மேற்கு கிணறு ,வடமேற்கு கிணறு, தென்கிழக்கு கிணறு இருந்தாலும் அது சார்ந்த மக்களை தொந்தரவுகள் கொடுக்கும். தென்மேற்கில் கிணறு வந்தால் குடும்பத்தின் மூத்த குழந்தைக்கு கஷ்டம் வரும்.. தென்கிழக்கு தவறு இருந்தால் அந்த வீட்டுப் பெண்களுக்கு கஷ்டம் வரும். வடமேற்கு கிணறு இருந்தால் அந்த வீட்டின் மருமகள் அல்லது மகள் சார்ந்த பாதிப்பு உண்டாக்கும்.இதற்கு தீர்வு அவர்கள் கைகளில் தான் உள்ளது.