உலக சுற்றுச்சூழல் தினம் |சென்னை வாஸ்து | chennai vastu

இன்று #உலக_சுற்றுச்சூழல் #பாதுகாப்பு தினம் 1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக ஜூன் 5 ஆம் தேதியை அறிவித்தார்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய நாட்டின், உலகத்தின் நிலையை பொறுத்து இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்பது அவசியமானது. ஒரு நிலத்தில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு. அந்த வகையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்கிற அடிப்படையில், திறமை இருக்கிற மனிதர்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் விதமாக வாழ்வதென்பது நடந்து கொண்டு இருக்கிறது. இயற்கை ஆதாரங்களை அழித்து வாழ்க்கை வாழ்வது இன்று நடந்து கொண்டிருக்கின்றன உலக வெப்பமயமாதல், சூழல் மாசடைதல், சுத்தமான தண்ணீருக்கு, காற்றுக்கு தட்டுபாடு போன்றவை சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடியகொரோணா நோய்த்தொற்று கூட 94 புள்ளிகளுக்கு மேலாக ஆக்சிசன் அளவு என்பது இருக்க வேண்டும் என்று மருத்துவத்துறை கூறியிருக்கிறது. அந்த இயற்கை முறையில் பூமியில் ஆக்ஸிஜன் கொடுக்கும் இயந்திரங்களாக மரங்கள் உள்ளன. அந்தவகையில் ஒவ்வொரு மனிதர்களும் மரத்தை பாதுகாக்கும் மனிதர்களாக இருக்க வேண்டும். மரங்கள் இல்லை என்றால் நாம் நிச்சயமாக இறந்து விடுவோம். மனிதர்களின் மூர்க்கத்தனமான செயல்பாடுகளில் ஒன்று மரங்களையும் காடுகளை அழிப்பது . ஒரு பூமியை பாலைவன நிலைக்கு கொண்டு செல்வது,

மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய இரண்டு விஷயம் தற்கால நீர் தேவையை அறிந்து வாழ்வது.

எதிர்கால நீர்த் தேவைக்கு திட்டமிடுவது.

நீர் தேவை என்பது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது.

மீதி இருக்கும் தண்ணீரை மரங்கள் வளர்ப்பதற்கு பயன்படுத்துவது. எதிர்கால நிர் தேவை என்பது மழை பெய்தால் தான் தண்ணீர் வரும் . எனது வாஸ்து பயணத்தில் கூட மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றேன். வாஸ்து ரீதியாக எங்கு மரங்களை வெட்ட வேண்டும், எங்கு மரங்களை வெட்டக்கூடாது, எங்கு மரங்களை வைக்கலாம். எங்கு வைக்க கூடாது என்கிற விஷயத்தை ஒரு வீடு கட்டுவதற்கு முன்பாகவே நான் சொல்லி விடுகிறேன். தேவையில்லாமல் ஒரு மரத்தை வைத்து வெட்டுவது கூட ஒரு குற்றமான செயல் தான்.

அந்த வகையில் நமக்கு தோட்டம் இருக்கின்ற பட்சத்தில் தெய்வீக மரங்களாக இருக்கக்கூடிய நெல்லி மரம் .வில்வமரம். இலந்தை மரம். போன்றவற்றை நமது இடங்களின் ஓரப்பகுதியில் வைத்து வளர்க்கலாம். அதேபோல நல்ல ஆக்சிசனை கொடுக்கக்கூடிய பூமியை கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனைப் கொடுக்கக்கூடிய மூங்கில் மரங்களை வந்து நம்முடைய இடத்தில் எல்லைப்பகுதிகளில் தாராளமாக வளர்க்கலாம். இல்லத்திற்கு முன்பாக மகிழ மரத்தை வளர்க்கலாம். மகிழ மரம் வளர்ப்பு என்பது வீட்டில் கூடிய குழந்தைகள் மகிழமர காற்றை சுவாசிக்கும் போது அறிவு வளரும். ஒரு இல்லத்தில் முன்பு பன்னீர் மரத்தை வளர்க்கும் பொழுது, ஒரு நல்ல வாகனங்களை நிறுத்தும் பொழுது ஆசிர்வதிக்கப்பட்ட வாகனமாக மாறிவிடும்.ஒரு வாஸ்து குறைகள் இருக்கின்ற பொழுது குருந்த மரத்தை வீட்டிற்கு அருகில் தாராளமாக வளர்க்கலாம். அது ஒரு சில வாஸ்து பலம் பொருந்திய வுடாக மாற்றி வைக்கும். சந்தன மரத்தை தங்களுடைய வயல் தோட்டப் பகுதிகளில் வளர்க்கலாம். நல்லது கொடுத்து தீமையை அழிக்கும். நன்மையே கொடுக்கும் திருமகள் அம்சமாக இருக்கக்கூடிய கரு #நெல்லி மரத்தை தாரளமாக உங்களுடைய தோட்டத்தில் வளர்க்கலாம். வீட்டில் வெளியே வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த நாளில் ஒரு சபதம் ஏற்கும் தினமாக உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தில் ,#ஜோதிட ரீதியாக இருக்கக்கூடிய 27 #நட்சத்திர_மரங்களை நீங்கள் வளர்த்து, எங்கு வாய்ப்பு இருக்கிறதோ #மலைகள் அல்லது, கோயில்கள், அங்கு கூடிய அந்த நிறுவனத்தின் அனுமதியை பெற்று நீங்கள் ஒரு மரத்தை வைத்து ரெகுலராக வாரம் ஒரு நாள், அந்த ஆலயத்திற்குச் செல்லும்போது கூடவே தண்ணீர் ஒரு குடம் சென்று நீங்கள் வைத்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வாருங்கள்.

ஒரு சிறிய மலைகள்,சிறிய கரடுகள், அங்கு ஆலயங்கள் இருக்கும் .அந்த ஆலயங்களில் வாரம் ஒரு முறை சென்றால் உங்களுடைய நட்சத்திர அல்லது, உங்களுக்கு ஜாதகத்தில் நன்மைதரும் மரத்தை நீங்க வளர்க்கும் போது, நல்ல ஒரு பயனை கொடுக்கக்கூடிய மலர், அல்லது உங்களுக்கு பாசிட்டிவாக கிரகத்தின் மரம், வளர வளர உங்களுடைய வாழ்க்கை வளரும்.

அந்த வகையில் #அஸ்வினி நட்சத்திரத்திற்கு ஈட்டி மரமும்,

#பரணி நட்சத்திரத்திற்கு நெல்லி மரமும்,

#கிருத்திகை நட்சத்திரத்திற்கு அத்தி மரம்.

#ரோகிணி நட்சத்திரத்திற்கு நாவல் மரம்.

#மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் கருங்காலி..

#திருவாதிரை நட்சத்திரத்திற்கு செங்கருங்காலி .

புனர்பூசம் நட்சத்திரத்திற்கு மூங்கில்.

நட்சத்திரத்திற்கு
பூசம் அரசு .
நட்சத்திரத்திற்கு
ஆயில்யம் #புன்னை.
நட்சத்திரத்திற்கு
மகம் ஆலம்.
பூரம் நட்சத்திரத்திற்கு
பலா.

உத்திரம் நட்சத்திரத்திற்கு #அலரி .

அஸ்தம் நட்சத்திரத்திற்கு
#அத்தி .

சித்திரை நட்சத்திரத்திற்கு வில்வம்.

சுவாதி நட்சத்திரம் – #மருதம்.

விசாகம் – விழா .

அனுஷம் #மகிழம் கேட்டை

பிராய் பூராடம் #வஞ்சி

உத்திராடம் #பலா

திருவோணம் #எருக்கு

அவிட்டம் வன்னி .

சதயம் – கடம்பு.

பூரட்டாதி – தேமா.

உத்திரட்டாதி _ #வேம்பு.

ரேவதி நட்சத்திரத்திற்கு இலுப்பை.

ஆக நட்சத்திர மரங்களை வைத்து பூமிக்கு வளம் சேர்ப்போம். நமது வாழ்க்கைக்கும் வளம் சேர்ப்போம்.