உதவும் கொடுங்கள் என்னும் கருவி

உதவும் கொடுங்கள் என்னும் கருவி

உங்களின் ஆசையை அடைவதற்கு உதவும் கொடுங்கள் என்னும் கருவி:நம் வசிக்கும் இந்த பூமி பந்தில் நமக்கு தேவையான அனைத்தும் நிரம்பி இருக்கிறது, படைப்பின் ரகசியமும் இதுதான். நாம் செய்ய வேண்டியது நமக்கு என்ன தேவை என்பதை தெளிவாக கேட்க தெரிந்து இருக்க வேண்டும்..உங்கள் தேவையை இந்த பிரபஞ்சம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு ஈடுஇணையாக எதை கொடுக்க போகிறீர்கள் என்பது ரொம்ப முக்கியமானது..

 

 

உதாரணத்திற்கு உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஏற்கனவே உங்களிடம் இருக்கும் அன்பையோ, செல்வத்தையோ, அரவணைப்பையோ,இன்சொல்லாகவோ மற்றவருக்கு கொடுக்க வேண்டும்..பணம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் அது ஆறுதலாக இருக்கலாம்,சேவையாக இருக்கலாம்,மற்றவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எதுவாகவும் இருக்கலாம்..உங்களை பார்த்து கையேந்தும் நபர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்து பழகுங்கள்.

 

 

அப்போது உங்களுக்கு தேவையானதை இந்த பிரபஞ்சம் கொட்டி கொடுக்க ரெடியாக இருக்கும்.உங்களின் தனிப்பட்ட திறமைகள் மூலம் உலகிற்கு உன்னதம் கொடுக்கும்போதுதான் உங்களுக்கான பலன் கிடைக்கும்..நல்லதை மற்றவர்க்கு கொடுத்து நன்மை பெறுவோம்.

மீண்டும் நல்ல கருத்துக்களோடு சந்திப்போம்.

என்றும் பிரபஞ்சசக்திகளின் துணையாக,

சென்னை வாஸ்து ஜெகன்.

                       whatsapp 9965021123

 

error: Content is protected !!