உணர்வின் சக்தி

உணர்வின் சக்தி

உணர்வின் சக்தி
உணர்வின் சக்தி

உணர்வின் சக்தியை கொண்டு வாழ்க்கையை உயர்த்துங்கள்:

மனித மூளை என்பது மண்டையோட்டின் கீழாக புகை நிறத்தில் இருக்கும் ஒரு வஸ்து. ஆனால் உணர்வின் சக்தி என்கின்ற மனம் என்பது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மூளையை விட பல்லாயிரம் மடங்கு சக்தி மனத்திடம் இருக்கிறது. அந்த மனதையும் மூளையையும் இனைத்தால் மிக பெரிய வாழ்க்கையை, நாம் ஆசைப்படக் கூடிய எண்ணங்களை செயல்படுத்த முடியும். மனித உடலில் மனம்தான் சூட்சும சக்தி. மனதில் எழும் எண்ணங்களே கற்பனை தான். அந்த கற்பனை சரியாக இருக்கிறதா என்று மனதின் வழியாக தெரிந்து கொண்டுதான் ஒரு காகிதத்தில், ஒரு கல்லில், ஒரு பொருளில், உருவங்களாக உருவாக்குகின்றோம். இந்த இடத்தில்தான் அதிர்ஷ்டம் அழைக்கிறது என்கின்ற அதிசயம் நடக்கிறது .
ஒருவருக்கு கார் வேண்டும் என்று சொன்னால் மனிதமூளை மூலமாக உருவாக்க முடியாது. ஆனால் மனது கொண்டு மனத்தின் வழியாக கார் கிடைக்க மனம் வழி செய்து கொடுக்கும். ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவருக்கு கார் இருந்தால் அவருடைய தொழில் சார்ந்த பயணம் விரைவாக இருக்கும் என்று எண்ணுவார்கள். மேலும் நம்முடைய தொழிலை கவனித்து லாபத்தை அதிகரிக்க முடியும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கும். இந்த இடத்தில் அவர் என்ன செய்யவேண்டும் என்று சொன்னால் அவர் ஒரு காரில் போவதாகவும், பல்வேறு இடங்களுக்கு தனது பொருட்களை தனது காரில் ஏற்றி புதிய புதிய இடங்களுக்கு மார்க்கெட்டிங் விஷயமாக புதிய புதிய ஊர்களுக்கு பயணம் செய்வதாக கற்பனை செய்யவேண்டும். இதனால் அவர் அதிக லாபம் அடைவதாகவும் என்கிற எண்ணத்தை அவர்கள் மனதில் மூலமாக மூளைக்கு கொடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலம் தொடர்ந்து இதனை செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு கால கட்டத்தில் அவருடைய நண்பர் ஒருவரிடம் இருந்து போன் வந்தது. அதாவது நான் வெளிநாட்டு வேலைக்கு சேரப் போகிறேன் எனது காரை எடுத்து பயன்படுத்திக் கொள், எனக்கு உடனடியாக பணம் தரவேண்டாம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம். என் வீட்டுக்கு வந்து என்னுடைய காரை எடுத்துக் கொண்டு செல் என்று அவருக்கு அழைப்பு வந்தது.
ஆக நமக்கு என்ன வேண்டுமோ இந்த பிரபஞ்ச சக்தியிடம் மனதின் வழியாக கோரிக்கை வைத்தால் நமக்கு தேவையான விஷயங்கள் நம்மை நோக்கி வந்து விடும். ஆக நாம் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம். என்ன வேண்டுமோ இந்த பிரபஞ்சத்திற்கு மனதின் வழியாக அடையாள படுத்துங்கள்.

error: Content is protected !!