உங்கள் வீட்டிற்கு பாம்பு வருகிறதா

உங்கள் வீட்டிற்கு பாம்பு வருகிறதா

 

அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்

சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

 

உங்கள் வீட்டிற்கு பாம்பு வருகிறதா
உங்கள் வீட்டிற்கு பாம்பு வருகிறதா

 

 

 

 

 

 

 

இன்றைய வாஸ்து கருத்தினில் மக்களின் இல்லங்களில் அதாவது கிராமப்புறங்களை ஒட்டி அல்லது நகரின் வெளிப்புறப் பகுதிகளில் அது நகரை ஒட்டிய ஓரப் பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பாம்புத் தொல்லை என்பது சர்வ சாதாரணமாக இருக்கும் இதற்கு வாஸ்துவின் ரீதியாக ஏதாவது தீர்வு உண்டா? என்று கேட்கின்ற மக்களை நான் சந்தித்திருக்கிறேன்.
அதேபோல கிராமப்புறங்களிலும் பாம்புத் தொல்லை சார்ந்த தொந்தரவுகளை சந்திக்கும் குடிமக்களையும் பார்த்திருக்கின்றேன். அதேபோல தோட்டப்பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு பாம்புத் தொல்லை என்பது சர்வ சாதாரணமாக இருக்கும்.

 

 

அப்படி பாம்பு தொல்லையால் அவதிப்படுகின்ற நமது மக்கள் சென்னை பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் நாகாத்தம்மன் வழிபாடும், கோவை பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தம்பிக்கலை ஐயன் மற்றும் வாலைத்தோட்டத்து ஐயன் மற்றும் திருச்சி மதுரை பகுதிகளில் குடிமக்கள் பாம்பு புற்று வழிபாடுகளும் செய்கின்றனர். இது ஒருவகையில் பாம்பு தொல்லைகளுக்கு தீர்வு கிடைத்தாலும் இன்னும் ஒரு அற்புதமான விசயம் என்பது இருக்கிறது.

 
இந்த பாம்பு தொல்லைகளால் அவதிப்படுகின்ற மக்கள் ஜோதிடரை அணுகும் பொழுது அவர்கள் ராகு கேது வழிபாடுகள் அதாவது, ராகு-கேதுக்கள் என்று சொல்லக்கூடிய பாம்பு பின்னி கொண்டிருக்கக்கூடிய உருவங்களை நதிக்கரை ஓரமாகவும், அரசமரத்தின் அடியில் இருக்கும் விநாயக பெருமான் அருகில் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று சொல்வார்கள்.

 
இந்த இடத்தில் எனது வாஸ்து பயணத்தின் வழியாக ஒரு சில பரிகாரங்கள் பாம்புகள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் பயனளிக்கும். நாகமல்லி என்று சொல்லக்கூடிய செடியை ஒரு இல்லத்தில் வைக்கும் போது, பாம்பு தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். மற்றும் உங்கள் இல்லத்தில் வெளிப்பகுதியில் மற்றும் வரவேற்பறையில் சமையலறையில் படுக்கை அறையில் கருடன் பறந்து கொண்டிருக்கின்றது கொண்டிருக்கின்ற அமைப்பில் ஒரு படத்தினை படிக்கும் பொழுது, அதாவது மகாவிஷ்ணுவின் வாகனமாக இருக்கும் கருடன் படம் வையுங்கள்.
கருடன் படத்தை அல்லது உருவத்தை வைக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாம்பு தொல்லைகள் நீங்கி விடும் இதனை வெளிநாட்டு மக்கள் psychosymbology என்று கூறுகிறார்கள்.

snake brabalam in the house

 

பாம்பு தேள் தொந்தரவு இருக்கிறது என்று சொன்னால், அந்த இடத்தை சுற்றிலும் எந்த செடிகொடிகள் வீட்டு சுற்றுச்சுவரில் தொடும் அமைப்பு இருந்தால் அப்புறப்படுத்தி விடுங்கள். வெளியிலிருந்து தொடர்பு அல்லது தொட்டுக்கொண்டிருக்கும் அமைப்பாக வீட்டில் அமைக்க வேண்டாம்.அதாவது எங்காவது மரம் செடி கொடிகள் எங்களுடைய சுற்றுச்சுவரை தொடர்பு கொண்டிருந்தால் அதை அப்புறப்படுத்துங்கள் அடுத்ததாக தலைவாசல் கீழே இடைவெளி இல்லாமல் செய்து விடுங்கள். வேறு எங்கும் கிரில் அமைப்பு ஏற்படுத்தி பாம்புகள் வருவதற்கு வழிகளை ஏற்படுத்த வேண்டாம். இதற்குப் பிறகு பாம்புகள் வீட்டிற்கு உள்ளே வருகிறது என்று சொன்னால் மட்டும் நான் சொன்ன மேற்கூறிய கருடன் படத்தையும் நாகமல்லி செடியையும் வைத்து தடுத்து விடுங்கள்.

Learn How to Keep Snakes Out of Your House

 

இதற்குப் பிறகும் உங்கள் இல்லத்தில் பாம்பு தொல்லை இருக்கிறது என்றால், உங்கள் இல்லத்தில் தென் மேற்கு மற்றும் வடமேற்கு வாஸ்து அமைப்பில் மிகப் பெரிய குறைகள் இருக்கிறது என்று அர்த்தம். இந்த இடத்தில் பாம்புகள் வருகிறது என்று சொன்னாலே, அதிகபட்சம் பெண் பாம்புகள் தான் அதிகம் வரும். பெண் சார்ந்த ஒரு ஆதிக்கம் ஒரு இல்லத்தில் வேண்டும் என்பதற்காக பாம்புகள் வருகின்றன என்று எடுத்துக்கொள்ளுங்கள்.அதனால் அங்கு ஆண்களை பாதுகாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். நம்முடைய முன்னோர்கள் ஒரு விஷயத்தை சொல்வார்கள் சூரியன் சந்திரனை பாம்புகள் விழுங்குகின்றன என்பார்கள். இதனையே சூரிய கிரகணம் என்று சொல்லுவோம். அந்த வகையில் ஒரு பாம்பு இல்லத்திற்கு வருகை என்று சொன்னால் ஆண்களை மதி இழக்க செய்கிறது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

 

ஆகவே ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணைகொண்டு இறுதியாக இடப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது .
மீண்டும் நல்ல ஒரு வாஸ்து கருத்தோடு சந்திப்போம் நன்றி வணக்கம்.

Snakes In and Around the House