ஆண் மனையா பெண் மனையா?

உங்கள் இல்லம் ஆண் மனையா பெண் மனையா?

ஆண் மனையா பெண் மனையா?
ஆண் மனையா பெண் மனையா?

உங்கள் இல்லம் ஆண் மனையா பெண் மனையா?

இந்த பூமியில் வாழும் மனித உயிர்களில் மற்றும், மரங்களில் ஆண் பெண் சார்ந்த பாலினங்கள் உண்டு. விலங்குகளில் ஆண் பெண் தெரியும். அதே மாதிரி மனையிலும் ஆண் பெண் சார்ந்த மனைகள் இருக்கின்றதா என்றால், என்னைப் பொருத்தவரை எனது வாஸ்து அனுபவத்தில் இருக்கிறது என்றுதான் சொல்லுவேன்.

ஆண் மனை பெண் மனை என்ற இரண்டு மனைகளின் விபரங்களை தெரிந்து கொள்வோம்.. தெற்கு வடக்கு பகுதி நீளம் அதிகமாக இருந்து, கிழக்கு மேற்கு பகுதி நீளம் குறைவாக இருந்தால் அது பெண் மனை எனப்படும்.அதேபோல கிழக்கு மேற்கு நீண்ட நிலையில் இடம் இருந்து வடக்கு கிழக்கு குறைவாக அகலத்தில் இருக்கும் போது இதனை ஆண் மனை என்போம். ஏன் இந்த விளக்கம் உங்களுக்கு என்பதனை தெரிந்து கொண்டு இல்லத்தை அமைக்கும் போது ஒரு இல்லத்தில் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்.

ஒரு இல்லத்தில் ஆண் மக்கள் அதிகமாக இருக்கும் போது,ஆண் மனையில் குடியிருந்தால் நல்ல பலன்களையும், அல்லது பெண் மனையாக இருக்கின்ற போது அந்த மனையில் பெண் மக்கள் அதிகமாக இருக்கும் போது நல்ல பலன்களை வழங்கும்.

ஆக ஆண் மனையில் பெண் அதிக எண்ணிக்கை ஆக இருந்தால் அதனை பெண் மனையாக மாற்றம் செய்தால் நல்ல பலன்களையும், பெண் மனையில் ஆண் அதிக எண்ணிக்கையாக இருந்தால் அதனை ஆண் மனையாக மாற்றம் செய்தால் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்.

எந்தவொரு மனையையும் ஆண் மனை பெண் மனை இணைந்த அமைப்பாக அமைத்தால் மட்டுமே அந்த வீட்டில் உள்ள ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வாழ்க்கை என்பது உன்னதமான அமைப்பாக இருக்கும். அப்படி ஆண் மனையை பெண் மனையாகவும்,பெண் மனையை ஆண் மனையாகவும் எளிதாக அமைக்க முடியும்.

error: Content is protected !!