உகாதி புதுவருட நல்வாழ்த்து

எங்கள் சகோதர மக்களாகிய #தெலுங்கு மற்றும் #கன்னட மொழி பேசும் #பலிஜா மக்கள் , #கம்மவார் மக்கள் , #கவரா மக்கள், #ரெட்டிமக்கள், #கொல்லா மக்கள், ராஜகம்பள மக்கள் ,#போயர் இன மக்கள் #ஆதிதிராவிட மக்கள், கன்னட #ஒக்கலிக மக்கள், #படுகர் இன மக்கள் மற்றும் #முத்துராஜா ,வெலமா சமூகத்தினர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்து தெலுங்கு கன்னட #மகாராஷ்டிரா சார்ந்த #சவுராஷ்டிரா மக்கள் அனைவருக்கும் எனது #உகாதி புதுவருட நல்வாழ்த்துக்கள்.ஏனென்றால் நான் நன்றாக வாழ்கிறேன் என்றால் நீங்களும் அதற்கு காரணம். அதாவது அதிக #வாஸ்து_பயணங்கள் உங்களை சார்ந்த மக்கள் என்னை அழைக்கின்றனர்.அதற்கு நன்றிக்கடனாக இப்பதிவு.

டெக்கான் பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டாடும் வருட பிறப்பே உகாதியாகும். உகாதி என்பது ‘#யுகாதி’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது. ‘யுக்’ என்றால் வயது என்றும் ‘ஆதி’ என்றால் ஆரம்பம் என்றும் பொருள் தரும். உகாதி என்பது #ஆந்திர பிரதேசம், #கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் #கொங்கன் பகுதிகளில் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. #இந்து புராணத்தின் படி, இந்த நாளில் தான் தன் படைத்தல் வேலையை தொடங்கினாராம் பிரம்ம தேவன். அதனால் உகாதி பண்டிகையை தெற்கு #இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உகாதி என்பது இளவேனிற் கால வருகையை குறிக்கும் தினமாக விளங்குகிறது. இக்காலத்தில் மரங்களில் பூக்களும் பழங்களும் மீண்டும் துளிர்வதால், புது வாழ்க்கையின் ஆரம்பத்தை இது குறிக்கும். மரபுகளின் படி, பண்டிகை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே உகாதிக்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும். பண்டிகை தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டை துடைத்து சுத்தப்படுத்தும் சடங்கு முறையை பின்பற்ற வேண்டும். சுத்தப்படுத்துவதை தவிர வேறு சில சடங்குகளும், மரபுகளும் இருக்கின்றன. அதனைப் பற்றி பார்க்கலாமா? உகாதி #பச்சடி உகாதி தினத்தன்று, உகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும் – #இனிப்பு, கார்ப்பு, கசப்பு, #புளிப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு. இதனை தயாரிக்க இவைகள் பயன்படுத்தப்படும் – #வெல்லம் (இனிப்பு) சந்தோஷத்தை குறிக்கும், உப்பு (உவர்ப்பு) வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும், வேப்பம் பூக்கள் (கசப்பு) வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும், #புளி (புளிப்பு) சவாலான தருணங்களை குறிக்கும், மாங்காய் துண்டுகள் (துவர்ப்பு) புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும், கடைசியாக #மிளகாய் பொடி (கார்ப்பு) கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங்களை குறிக்கும். சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி.

மீண்டும் நல்ல கருத்தோடு சந்திப்போம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122

www.chennaivasthu.com
www.chennaivastu.com
www.chennaivastu.in