இளம் வயதில் இயற்கை மரணம், தற்கொலை, கொலை, விபத்தில் மரணம், யுத்தத்தில் மரணம், நெருப்பு வளர்த்து மரணம், ருத்திர மரணம்,நோய்கள் மூலமாக மரணம்,

ஆன்மீக இரகசியம்

அவதார புருஷன் ராமபிரானே பிரம்மஹத்தி தோஷத்தின் காரணமாக பாதிக்கப்பட்டார் . அவதார புருசர்களே இதனால் பாதிக்கும் போது, மனிதர்களை இந்த தோஷம் பாதிக்குமா? என்றால் நிச்சயமாக பாதிக்கும்.இளம் வயதில் இயற்கை மரணம், தற்கொலை, கொலை, விபத்தில் மரணம், யுத்தத்தில் மரணம், நெருப்பு வளர்த்து மரணம், ருத்திர மரணம்,நோய்கள் மூலமாக மரணம், இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒரு இல்லத்தில் கொடுப்பது பிதுர் தோசம் மூலமாக நடக்கும். அதிகப்படியான இந்து மக்கள் முன்னோர்களை நினைப்பது என்பது கிடையாது.ஆனால் முஸ்லிம்கள் கூட தினம் தொழுகை நடத்தும் விஷயத்தில் முதல் தொழுகை முன்னோர்களுக்காக நடத்துகின்றனர்.அதுபோல இந்துக்கள் காலை 11.30முதல் 12.15 உள்ளாக குதபகால நேரத்தில் முன்னோர்களை நினைத்தால் பிதுர்தோச பாதிப்பு குறையும். மற்றும் அமாவாசை நாட்களில் நிச்சயமாக முன்னோர்களை நினைக்க வேண்டும்.பவுர்ணமி தினத்தில் அன்னதானம் மற்றும் அமாவாசை தினத்தன்று பிதுர் தர்ப்பணம் மற்றும் எள்ளும் தண்ணியும் கொடுப்பதும் பிதுர் தோசத்தை மட்டுப்படுத்தும். பிதுர்தோஷம் இருந்தால் திருமண தடைகளையும், வாழ்க்கையில் சந்தோசம் நிகழ்வுகளில் தடைகளைக் கொடுக்கும்.ஆக முன்னோர்களை சாந்தி செய்து ஒளி உலகத்திற்கு அனுப்பாவிட்டால் இந்த பூமியிலே சுற்றிக்கொண்டு சம்பந்தப்பட்ட மக்களுக்கு இடையூறுகளைக் கொடுக்கும். ஜோதிடர்கள் மூலமாக ஜாதகத்தில் பார்த்து நிவர்த்தி செய்து கொள்ள, அல்லது தற்காலிக பரிகாரமாக ஒவ்வொரு நாளும் கருடபுராணம் படித்து வர கட்டுப்படும்.காட்டுபடையல் போடுவதும் பித்ரு சாபம் மட்டுப்படும்.

வாஸ்து ரகசியம்:

மக்கள் செய்யும் ஒரு சில தவறுகள் வாஸ்து அமைப்பில் பாதிப்பைக் கொடுக்கும். அந்தவகையில் தலைவாசல் சார்ந்த நிலையை தவறாக அமைத்து பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். தலைவாசல் என்பது வாசல் மட்டும் தனியாக இருப்பதுதான் நல்லது . ஆனால் இன்று நாகரீக அழகு என்கின்ற பெயரில், மனம் போன போக்கில் அமைத்துக் கொள்கின்றனர். அப்படி அமைக்கும் பொழுது இடையில் ஓரத்தில் ஜன்னல் அமைப்பை ஏற்படுத்தி மூன்று நிலைகள் வருவதுபோல அமைத்து, தவறு செய்து விடுகிறார்கள். இதனை எக்காரணம் கொண்டும் வாஸ்து ரீதியாக செய்யக்கூடாது.