இரட்டைவீடுகள் வாஸ்து

ஒரே இடமாக இரு நபர்கள் வாங்கி ஒரே சுற்றுச்சுவர்எழுப்பிவீடு கட்டுவது என்பது ஒரு நகரில் ஓரிரு இடங்களில் நடக்கிறது.அதுவும்ஒரு சில இடங்களில் இடையேபொதுச்சுவர் இருக்கும்.அல்லதுஇல்லாமல்இருக்கும்.இது வாஸ்து ரீதியாக சரியா? என்கிற கேள்விகள் நமது மக்களிடம் இருக்கும்.

இந்த இடத்தில் அப்படி வீடுகள் கட்டி இரு குடும்பங்கள் வாழும் போது ஒரு குடும்பம் மட்டுமே நல்லவாழ்க்கை வாழக்கூடிய சூல்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

அப்படி எந்த திசையில் மனை இருந்து வீடு கட்டினாலும், வடக்கு மற்றும் கிழக்குபுறங்களில் இருக்கும் வீடுகளில் மட்டும் நல்ல பலன்களை கொடுக்கும்.மேற்கு மற்றும் தெற்கு புறங்களில்இருக்கும் வீடுகளும் நல்ல வாஸ்து அமைப்பு ஏற்படுத்தினால் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும்.என்னைப்பொருத்தவரை எனது அனுபவத்தின்படி இரண்டு வீடுகள் இணைந்து கட்டுவதும், ஒரு இடத்தை இருவர் வாங்கி வீடு கட்டுவதும் மிகவும் தவறு.