இன்றைய காலகட்டங்களில் வாஸ்து பிளான்

ஆன்மீக இரகசியம்:

சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் தும்பைப்பூ அதனை கொஞ்சம் பறித்தது வலது உள்ளங்கையில் வைத்து, சிவமந்திரம் ஜெபித்தோ,அல்லது தேவார பதிகம் பாடியோ, சிவ பெருமானுக்கு உச்சியில் வைக்க உங்கள் எண்ணம் ஈடேறும்.

வாஸ்து இரகசியம்:

இன்றைய காலகட்டங்களில் வாஸ்து பிளான் என்று சொன்னாலே பிரம்மஸ்தானத்தை திறந்து வைத்துக் கொள்வதும் அல்லது, கட்டிடத்தில் இடைப்பட்ட பகுதியில் ஒரு ஓரத்தில் பூங்காக்களை ,புல்வெளி அமைத்துக் கொண்டு அதனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், அதனை வாஸ்து ரீதியாக அமைத்துக் கொடுங்கள் என்று சொல்கிற மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். சந்திக்கிறேன். தயவுசெய்து முடிந்தால் உங்கள் வாழ்க்கையில் தோட்டம் வாங்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்குள் கட்டிடத்தை வெட்டிவிட்டு புல்வெளி தோட்டம் அமைக்க வேண்டாம்.