இன்று பிரதோஷ நாள்

🚩இன்று பிரதோஷ நாள்🚩

#பிரதோஷம் என்பதற்கு வடமொழியில் தீங்கு நேரும் காலம் ஆகும். அதாவது சிவபெருமான் விஷம் அருந்திய நேரம். ஆகவே பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வணங்கி நமக்கு ஏற்படும் தீமைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளக் கூடிய வழிபாட்டுக்குரிய நேரம் ஆகும். பிரதோஷம் என்பது மாலையும், இரவும் சந்திக்கும் சந்தியாகாலம். இது மாதம் இரு முறை அமாவாசைக்கு முன்னும், பவுர்ணமிக்கு முன்பும் திரயோதசி திதி நாளில் பிரதோஷம் நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தான் சிவபெருமான் விஷத்தினை அருந்தி தேவர்கள் அனைவரையும் காத்தார்.ஆகவே நாமும் அதே நேரத்தில் சிவபெருமானை வழங்கும்போது வேண்டிய வரங்கள் அளித்துக் காப்பார் என்பது தின்னம்.

சிவபெருமான் ஆலகால விஷம் அருந்திய நாள் சனிக்கிழமை. ஆதலால் சனி பிரதோஷம் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இதனை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.அதாவது உத்தமம், மத்திமம், அதமம் என மூன்று வகை உண்டு.

உத்தமம் என்று சொன்னால் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, ஆகிய மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமை வருவது உத்தம மகா பிரதோஷம் ஆகும்.

மத்திம பிரதோஷம் என்பது சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தேய்பிறை சனிக் கிழமை வருவது மத்திம மகா பிரதோஷம்.

அதம பிரதோஷம் என்பது ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் தேய்பிறை மற்றும் வளர்பிறை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் அதமம் எனப்படுகிறது.

🚩பிரதோஷ வழிபாட்டு முறைகள்🚩
📣📣📣📣📣📣📣📣📣📣📣

பிரதோஷத்தன்று நந்திதேவருக்கு அலங்கார, அபிஷேக பூஜை நடைபெறும். பிரதோஷத்தன்று நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே மகா லிங்கத்தை பார்த்து வணங்க வேண்டும். அன்றைய பிரதட்சணம் மிகுந்த நன்மையை கொடுக்கும். பிரதட்சணம் என்பது வழக்கமாக கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பிரகாரத்தை சுற்றி வருவதாகும்.ஆனால் பிரதோச பிரதட்சணம் என்பது வேறு விதமானது ஆகும்.

  1. கொடிமரத்தின் அருகில் நந்தியம் பெருமானை தரிசித்து, அங்கிருந்து இடது புறமாக சென்று சண்டேஸ்வர நாயனாரை தரிசித்து,
    பிறகு அதே வழியில் திரும்ப நந்திதேவரை பார்த்து தரிசிக்க வேண்டும்.
  2. பிறகு அங்கு இருந்து இடமாக கோமுகி வரை சென்று. மீண்டும் திரும்பி நந்திதேவரை தரிசிக்கவேண்டும்.

3 அங்கிருந்து முன்னர் சென்றது போல இடமாக சென்று சண்டேஸ்வரர் பெருமானை தரிசித்து திரும்ப நந்திதேவரிடம் வந்து அவரைத் தரிசிக்காது, வலமாகச் சென்று கோமுகியை சேர்ந்து அங்கிருந்து மீண்டும் நந்திதேவரை தரிசித்து அவரது கொம்புகள் வழியாக சிவபெருமானை பார்க்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து நீங்கள் செய்யும்பொழுது, உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும்,அதாவது பணத்தினால் தோஷங்கள் ஏற்பட்டு பணம் பற்றாக்குறை ஏற்படுவது, உறவுகளில் தோஷம் ஏற்பட்டு உறவுகளில் சண்டை சச்சரவுகள் உண்டாவது, உடலினால் தோஷம் ஏற்பட்டு நோய்களால் பாதிக்கப்படுவது,மற்றும் பிரேதம் சார்ந்த பிற தோசங்கள், இப்படி எந்த விதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய வல்லமை நம்முடைய சிவபெருமானின் பிரதோஷ தரிசனத்திற்கு உண்டு.ஆகவே இன்று பிரதோஷ தரிசனம் செய்து வாழ்க்கையில் வளம் சேர்ப்போமாகுக.

இது போல மூன்று முறை செய்யவேண்டும்.பிறகு இதனை நிறைவு செய்து அம்மையும் அப்பனும் இடப வாகனத்தில் ஆலய வலம் வரும் பொழுதும் பார்த்து தரிசிக்க வேண்டும். மும்முறை ஆலய வலம் வரும் திருமேனிகளை முதல்முறை வேதங்களும், இரண்டாவது முறை திருமறைகளாலும் , மூன்றாவது நாதஸ்வர மங்கள இசையையும், நீங்கள் கவனித்து வணங்க வேண்டும்.பிறகு கற்பூர ஆரத்தி தரிசனம் செய்து நிறைவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!