மனைகோல உகந்த நாட்கள்

பணக்காரர் ஆக படிக்கட்டுகள்!

பணக்காரர் ஆக பதினாறு படிக்கட்டுகள்!

உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்களுக்கு, தாங்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்து அல்லது தொழிற்சாலைகளைத் தொடங்கி, பெரிய தனவந்தர்களாகி விட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனினும், அவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் தொடர்ந்து கட்டுக்கோப்பான உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேறி வெற்றியடைகிறார்கள்.அவர்கள் யார் என்று பார்த்தால் நான் கூறியுள்ள பட்டியலை கடைபிடித்து நடப்பவர்கள் மட்டுமே பணக்காரர்கள் என்கிற இடத்திற்கு நகர்த்தப்படுகின்றனர்.

இதனை தினமும் ஒரு பதிவாக பார்க்கலாம்.

இன்றைய இரண்டாவது பதிவுஒரு கம்பனியின் அல்லது ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்கும்போது தனது வேலை சார்ந்த பணிகளை முடித்த பின், தான் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பவர்களுக்குப் பெரிய வெற்றி கிட்டும். அதை விடுத்து, தனது வேலையைச் செய்யாமல் வேலை நேரத்தில் வேலையை செய்யாது அந்த நிறுவனத்தையும் ஏமாற்றி விட்டு தன்னைத்தானே ஏமாற்றி விட்டு, பேராசையுடன் அடுத்த வேலைகளில் ஈடுபடுவது ஒருகாலகட்டத்தில் மனிதனுக்கு தோல்வியைத் தான் தரும்.

 

திடமான குறிக்கோள் ஒன்று இருந்தால், அதனை அடையும் தன்னம்பிக்கை உருவாகி விடும். தன்னம்பிக்கை உள்ள மனிதன் தன்னைத்தானே மிகவும் நம்புவான். தன்னம்பிக்கை உள்ள மனிதனை, அவனைச் சுற்றியுள்ளவர்களும் நம்புவார்கள்.அப்போது அவர்களின் பணம் சார்ந்த வெற்றி உறுதியாகிவிடும்.இதனை படித்து மனதில் நிறுத்தி நீங்களும் பணகாரர்கள் இடத்தில் இடம் பெற வாழ்த்துக்கள்.

என்றும் பிரபஞ்சசக்திகளின் துணையுடன்,

அருக்காணி ஜெகன்னாதன்

சூட்சும வாஸ்து நிபுணர்

whatsapp 9965021122

தமிழ்நாடு பணக்காரர்கள் பட்டியல்

error: Content is protected !!