இடம் வாங்கும் போது செய்ய வேண்டிய கிரய ஒப்பந்தம்

 

ஒருவர் இடம் வாங்கும் போது செய்ய வேண்டிய கிரைய ஒப்பந்தத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒருவர் ஒரு பொருள் விற்பனை செய்யும் போதோ, வாடகை பெறும் போதோ, சேவை பெறும் போதோ, அதில் உள்ள நிபந்தனை அடிப்படையில் சாட்சிகள் முன்னிலையில் ஒத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஒப்புதல் அளித்து எழுதிக் கொள்ளும் விபரம் ஆகும். இது பலவகையான ஒப்பந்தம் சார்ந்த ஒப்பந்தப் பத்திரங்கள் இருக்கிறது.
கிரைய ஒப்பந்த பத்திரம், வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் , வீடு கட்டும் ஒப்பந்தப் பத்திரம், வியாபர ஒப்பந்தப் பத்திரம் என நீண்டு கொண்டே போகிறது.

மனையிடம், வாங்கும் போது, விற்பவர்கள் மற்றும் வாங்கும் நபர்கள் மட்டும் எழுதினால் செல்லாது. ஒருசிலர் பெரும்பாலும் அவர்களின் லெட்டர் பேடில் அக்ரீமென்ட் எழுதுவார்கள் அதுவும் செல்லாது. கண்டிப்பாக ரூ.50 ருபாய் முத்திரைத்தாளில் ஒப்பந்தம் போட்டு இருக்க வேண்டும்.அதனை பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவாகி இருக்க வேண்டும். கிரைய ஒப்பந்தங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. வெறுமனே பதிவு செய்யாமல் போகும் அக்ரீமெண்டுகள் சிக்கல் வந்தால் நீதிமன்ற படியேறி நியாயம் பெற முடியாது.கிரைய ஒப்பந்தம் செய்து விட்டு, அதனை பதிவும் செய்துவிட்டு 3 ஆண்டுகள் வரை கிரயம் செய்யாத போது அந்த கிரைய ஒப்பந்தம் தானாகவே ரத்தாகி விடும். கிரைய பத்திரம் பெரும்பாலும் சொத்து வாங்குபவர் தான் மிகவும் எச்சரிக்கையாக தயார் செய்ய வேண்டும்.

அக்ரிமெண்ட் போடும்போது வாங்கும் தகுதி உள்ளவரா என்று தீர ஆராய்ந்து அக்ரிமெண்ட் போட வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு மூன்று வருடங்கள் இழுத்து விடுவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.அப்படி இருக்கும் போது உடனடியாக ரத்து செய்ய முயற்சிக்கவும்.மற்றும் வாங்குபவருக்கோ அல்லது அவர் குறிப்பிடும் மற்றவருக்கோ சொத்தை விற்க அனுமதிக்கலாம் என்ற விவரங்கள் அக்ரிமெண்ட்டில் எழுதினால் மட்டுமே பிறருக்கு கைமாற்ற வாங்குபவருக்கு உரிமை இருக்கிறது.
இடத்தை, விற்பனை செய்யும் நபர்கள் யார் , இடத்தை வாங்குபவர் பற்றிய முழு விபரங்களை ஒப்பந்தத்தில் பதிவு செய்ய வேண்டும்..இடத்தின்பேறில் எந்த வில்லங்களும் இல்லை என்பதை அக்ரீமெண்ட்டில் உறுதி செய்ய வேண்டும். அப்படி ஏதாவது வில்லங்கம் இருந்தால் அதனை விற்பவர்கள் பொறுப்பாக வேண்டும்.விற்பனை இடத்திற்கு மதிப்பிட்டு இருக்கும், அத்தொகை எண்னாலும், எழுத்தாலும் குறிப்பிட வேண்டும். விற்பனை செய்பவர் மற்றும் வாங்கும் நபர்கள் இருவரும் அந்த தொகைக்கு முழு சம்மதம் தெரிவித்து சாட்சிகளை கொண்டு கையொப்பம் இடவேண்டும்.

error: Content is protected !!