கோவில் சிற்ப வேலை

வாழ்வில் எளிமையான செயல் செய்கிறீர்களா…. அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா…

ஒரு ஊரில் கோயில் வேலையை மூன்று பேர்செய்து கொண்டிருந்தார்கள்…அப்போது அங்கு வந்தஒரு வழிப்போக்கர்…முதல் நபரிடம்,நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்.அந்த நபர் நிமிர்ந்து பார்த்து,பார்த்தால் தெரியவில்லையா? நான் கல் கொத்திக்கொண்டு இருக்கிறேன்…உனக்கு என்ன கண் குருடா?” என்று கேட்டார்.

 

உடனே அந்த நபர் அடுத்தவரிடம் சென்று, நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார். அவர் உடனே நிமிர்ந்து பார்த்து,ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக செய்கிறேன்.எனக்கு வேலை கொடுப்பவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் செய்வேன்,அவ்வளவுதான் என்று சொன்னார்.அடுத்து அவர் மூன்றாவது நபரிடம் சென்று,நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய், என்று கேட்டார்.அதற்கு அந்த மூன்றாவது நபர் எழுந்து நின்று, நான் இங்கே ஒரு அழகான கோவில் உருவாகிறது அதற்கு துணை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்….

 

 

அவர்கள் எல்லோருமே ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த ஒரே வேலையை மூன்று பேருமே…மூன்று விதமாக உணர்கிறார்கள்…அதற்கேற்றார் போல்தான் அவர்கள் வாழ்க்கையின் தன்மையும் அமைகிறது.எனவே நாமும் நமது வாழ்வில் எளிமையான செயல் செய்கிறீர்களா…. அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா….என்பதைவிட செய்யும் வேலையை எப்படி உணர்ந்து செய்கிறீர்கள் என்பதுதான்…உங்கள் வாழ்க்கைத் தன்மையை நிர்ணயிக்கிறது.

 

மேலும் விபரங்களுக்கு,

மீண்டும் ஒரு அற்புதமான தகவலுடன் சந்திப்போம்.

பிரபஞ்ச சக்திகளுக்கும் இறைசக்திகளுக்கும் இதனைப் படிக்கும் உங்களுக்கும் எனதுஅன்புகலந்த நன்றிகளுடன்,

#அருக்காணி_ஜெகன்னாதன்

வாஸ்து மற்றும்#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

whatsapp 9965021122

www.chennaivasthu.com

error: Content is protected !!