ஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.

ஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.

ஆயாதி சார்ந்த வாஸ்து   விளக்கம்.
ஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.

ஆயாதி சார்ந்த வாஸ்து   விளக்கம்.

ஒரு சில வாஸ்து சார்ந்த மக்கள் ஆயாதி என்கிற அப்படி எதுவும் கிடையாது என்று பேசுகின்றனர் அதனைப்பற்றி நான் ஒருசில கருத்துக்களை இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆகமவிதிப்படி ஒரு ஆலயத்தில் கொடிமரம் இல்லையென்றால் அது கோயில் வழிபாட்டு முறைகளுக்கு உகந்ததாக இருந்தாலும், அதன் பயன்கள் எனும் போது குறைவு என்று எடுத்து கொள்ள வேண்டும்.அதுபோல ஆயாதி அளவுகள் இல்லாமல் வீட்டை அமைப்பது என்பதும் தவறானது ஆகும்.

அதுபோல ஒரு ஆலயங்களை எடுத்துக்கொள்ளும் போது அந்த ஆலய அமைப்பில் ஆயாதி இல்லாது எந்த ஸ்தபதியார்கள் யாரும் ஆலயங்களை அமைக்க மாட்டார்கள். வாஸ்து என்பது ஆலயங்களில் இருந்து வந்ததன் காரணமாக ஆயாதி இல்லாமல் வீட்டை அமைப்பது என்பது அரை வாஸ்துவிற்கு சமமானது ஆகும்.

சிலர் கேட்கலாம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள கட்டிடங்கள் எல்லாமே ஆயாதி உடனா இருக்கிறது என்று.அதே கேள்வியை பாரம்பரியமாக குடும்பம் மற்றும் மகன் மகள் பேரன் பேத்தி என்று அன்போடு இணைந்து வாழும் முறை நமது நாட்டில் உண்டு. ஆனால் வெளிநாடுகளில் அந்ந முறை கிடையாது. அதேபோல நமது முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் நமது நாட்டில் மட்டுமே உள்ளது. அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் இரண்டாயிரம் வருடங்கள் கடந்த ஆலயங்களை பார்க்க முடியாது.
ஆக நமது சாஸ்திரங்களை நமது நாட்டில் மட்டும் பரிசோதனை செய்து பாருங்க.

ஆக ஆயாதி பொய்யாகவே இருக்கட்டும். நீங்கள் ஒரு அடி அளவிற்கு வீட்டை கட்டுகிறிர்கள். நான் என்ன சொல்கிறேன். நமது தமிழ் முப்பாட்டன் மயனார் சொன்ன முறைப்படி அளவுகளை வைத்து வீட்டை அதில் வாஸ்து சாஸ்திரத்தை உட்புகுத்தி ஒரு வாழ்க்கை வாழ்ந்து பாருங்களேன். என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

நான் ஒரு காலகட்டத்தில் வாஸ்து சார்ந்த விசயத்தை மட்டுமே எடுத்து கொண்டு எனது இல்லத்தை அமைத்தேன். அப்போது வாஸ்து விதிகளை உட்புகுத்தி மட்டுமே கட்டிடம் கட்டி ஒரு மூன்று வருடங்கள் சிரமப்படக்கூடிய வாழ்க்கை வாழ்ந்து,அதன் பிறகு ஏற்கனவே நமது முன்னோர்கள் சொன்ன அளவுகளை எனது இல்லத்திற்கு பொருத்திய பிறகு மட்டுமே எனது கஷ்டம் தீர்ந்து அந்த சாஸ்திரத்தை நான் உணர்ந்த பிறகு சொல்லி வருகிறேன்.
ஆக யாராக இருந்தாலும் அதனை உணர்ந்து உண்மையான முறையில் வாஸ்து பார்க்கும் போது ஒரு மனிதனுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடியும்.

ஆக ஒரு இல்லத்தில் வாஸ்து விதிகள் மட்டும் போதுமா? அல்லது வாஸ்துவோடு இணைந்த ஆயாதி அடி அளவுகள் உள்ள நல்ல குழிகணித வீடுகள் வேண்டுமா? என்று முடிவு செய்து வீட்டை கட்டுங்கள். நன்றாக வாழுங்கள்.

error: Content is protected !!