ஆயாதி குழி அளவுகளில் மனை/மனையடி அளவு

நண்பர்களுக்கு வணக்கம். மனையடி அளவு என்பது வெளி அளவு கிடையாது. பல இடங்களில் ஏற்கனவே வாஸ்து நிபுணர்கள் பார்த்த இடங்களுக்கு எனக்கு அழைப்புகள் வரும்.அங்கு வந்த நிபுணர் மிகப்பெரிய வாஸ்து குழுவில் இருக்கிறேன். அவர்கள் மனையடியை உபயோகிப்பது கிடையாது. ஆனால் உங்களுக்கு நான் தருகிறேன். வெளியில் சொல்ல வேண்டாம். நான் இருக்கும் குழுவிற்கு தெரிந்தால் என்னை அவர்களின் வாஸ்து குழுவில் இருந்து நீக்கி விடுவார்கள். அப்படி சொல்லி அரைகுறையாக மனையடியை வியாபார தந்திரமாக உட்புகுத்தி சொல்லி விட்டு சென்றுள்ளனர்.

ஆக இதற்கு எனது பதில் என்பது, வெளிப்புற பகுதி என்பது ஆயாதி குழி அளவுகளில் மனை கட்டாயம் இருக்க வேண்டும்.மனையின் உட்பகுதிக்கு ஆயாதி கிடையாது. உட்பகுதியில் மனையடி மட்டும் வேண்டும்.வெளி அளவுகளை மனையடியை கொடுத்து விட்டு உள்ளே இருக்கும் அளவுகள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் என்பதும் தவறு.அதேபோல காலண்டர் பின்புறம் இருக்கும் மனையடி அளவுகளை அப்படியே எடுப்பதும் தவறு.

மனையடி என்பது உள் அளவுகள். ஆயாதி குழிக்கணக்கு என்பது வெளி அளவுகள். இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.இதனை குழப்பங்கள் கொண்டு அப்படி யாராவது சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மனையடி பற்றிய விபரம் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். ஆயாதி கணக்கு மிக மிக முக்கியம். அதன் வெளிப்புற பகுதி அளவுகள் சரியான வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய 8 ×8=64 அல்லது 9×9= 81 அளவுகள் பிரம்மஸ்தானத்திற்கு பொறுந்தி
வரவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122