வாஸ்து பார்த்து வீடு கட்டுவது

ஆயாதி கணித அமைப்பும் வாஸ்துவும்

வாஸ்து சாஸ்திரம் – மனையடி சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம் – மனையடி சாஸ்திரம்

ஆயாதி கணித அமைப்பும் வாஸ்துவும் என்ற தலைப்பில் ஒரு சில விளக்கங்களை உங்களின் பார்வைக்காக தெரிவிக்கின்றேன்.

என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் வாஸ்துவில் சில்ப சாஸ்திரம் என்பதே வாஸ்துவாகவும், அப்படி வாஸ்து அமைப்பாக அமைக்கும் கட்டிடம் எப்படிப்பட்ட அமைப்பாக வரவேண்டும் அதாவது, ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்கின்ற முறை என்பது ஒன்று வேண்டும். ஆக அளவு என்பதனை நிர்நயம் செய்யும் ஒரு முறையே ஆயாதி கணித அமைப்பின் குழிகணித சாஸ்திரம் ஆகும்.

ஆயாதி சார்ந்த அளவுகளை சொல்லாமல் சில்ப சாஸ்திரம் என்று சொல்லக் கூடிய வாஸ்து மட்டுமே பார்க்கும் வாஸ்து நிபுணர்கள் ஆயாதி என்பது நகரங்களில் அமைப்பது சிரமம் என்று கூறினாலும், என்னைப் பொருத்தவரை ஆயாதி அளவுகளை உட்புகுத்துவது சரியானது என்பேன்

அதனை விடுத்து ஆயாதி என்பதே தவறு என்று கூறினால் அவர்கள் சொல்லும் வாஸ்துவும் தவறு என்றுதான் கூற வேண்டும். ஆக பொதுவாக தவறு என்று கூறுவது பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டு என்பது போல அறியாமல் சொல்வது ஆகும். வாஸ்துவில் ஆயாதி இல்லை என்று சொன்னால் அவர்களின் கணக்கில் ஸ்தபதியார்கள் ஆயாதி கணித அமைப்பு கொண்டு கோயில் அமைப்பும் பொய் என்று எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கோயிலில் இருந்து தான் வாஸ்து தொடங்கி உள்ளது.ஆக எந்தவொரு ஆலயங்களையும் நமது முன்னோர்கள் ஆயாதி கால்குலேசன் இல்லாது கட்டவில்லை.ஒரு சில ஆலயங்களை தவிர அனைத்து ஆலயங்களும் ஆயாதி கால்குலேசன் அமைப்போடு தானே இருக்கிறது.

இன்று தமிழ்நாட்டில் வாஸ்துவில் வாஸ்து பார்பதற்காக லட்சக்கணக்கான பணத்தினை வாங்கிகொண்டு ஆயாதி இல்லாமல் சில்ப வாஸ்துவை மட்டுமே சொன்ன வாஸ்து நிபுணர்கள் அமைத்து கொடுத்த இடங்களில்,அந்த இல்லத்தார்களின் அவர்கள் அழைப்பின் பேரில் சென்று அங்கு புதிய அமைப்பாக ஆயாதி கணித அமைப்பை இணைத்த பிறகு தான் நன்றாக,மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

பக்கா வாஸ்துவில் அமைந்த எனது வீடு பலவிதமான கஷ்டங்களை கொடுத்தது.அதன் பிறகு எனது வீட்டில் என்ன தவறு உள்ளது.என்று ஆராயும்போது இந்த ஆயாதி கணிதம் என்பதனை காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று விட்டுவிட்டோமே அதனை என்னவென்று நமது இல்லத்தில் பொறுத்தி பார்க்கலாம் என்று ஆராயும்போது, எனது வீடு வரவை விட செலவு அதிகம் உள்ள அமைப்பாக அமைந்து விட்டது. 2008 ல் இருந்து இந்த ஆயாதி கணிதம் எனக்கு தெரிந்து இருந்தாலும்,எனது கர்மா என்கிற காலச்சூல்நிலை எனது கண்ணை மறைத்து விட்டது.

அதன்பிறகு இன்று அந்த அமைப்பை எனது வீட்டில் மாற்றம் செய்த பின்னர் தான் எனது வாழ்வில் பணம் சார்ந்த விசயத்தில் மாற்றம் கிடைத்தது. ஒரு வாஸ்து நிபுணர்கூட தொலைக்காட்சி வழியாக சொன்னார் ஆயாதி வாஸ்துவில் உள்ள ஒரு வீட்டை வாஸ்து இல்லையென்று விற்பனை செய்யும் முடிவிற்கு வந்துவிட்டார்கள் என்று,அதாவது ஆயாதி பொய் என்று சொல்லாமல் சொன்னார்.இந்த இடத்தில் எனது கேள்வி என்னவெனில் நீங்களே மனையடி அளவு வேண்டாம் அது இருந்தாலும் தவறு கிடையாது.அந்த அளவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்று சொல்லும் போது உங்கள் அகராதியில் ஆயாதி மனையடி வேலைசெய்யாது எனும் போது அந்த இடத்தில் என்ன வேலை செய்தது நீங்கள் சொல்லும் வாஸ்து அந்த வீட்டை விற்காமல் காப்பாற்றி இருக்கலாம் அல்லவா.

ஆக ஆயாதி பொய்யாகவே இருக்கட்டும். ஆனால் அது மனையடி அளவுகள் மட்டும் தானே சாஸ்திரம் என்ன சொல்கிறதோ அதனை வைத்துவிடுவது நல்லது தானே.வாஸ்து என்ன சொல்கிறது வீடு என்பது சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.ஆயாதி கணித அளவுகளை நீங்கள் பயன் படுத்தும் போது இயற்கையாகவே அந்த அமைப்பு வந்து விடும்.என்ன அளவுகளில் ஆயாதி கணிதம் வரும் அமைப்பினை கொஞ்சம் கூட்டி அல்லது குறைத்து வைத்தால் முடிந்துவிட்டது. இவ்வளவு மட்டுமே ஆயாதி மனையடி குழிகணித அமைப்பு ஆகும்.

ஆக நமது தமிழகத்தில் ஆயாதி இல்லாமல் எந்த ஆலயங்களும் கிடையாது. வாஸ்து என்பது கோயிலில் இருந்து வந்தது தான்.ஆக வாஸ்து நிபுணர்கள் யாராக இருந்தாலும் ஆயாதி இல்லை என்று சொன்னால் இன்று இருக்கும் அத்தனை ஆலயங்களும் ஆயாதி கணிதத்தின் அடிப்படையில் அமைந்தது தானே .ஆக கோயிலில் உள்ள ஆயாதி பொய் என்று கூறுவார்களா.

ஆக என்னைப் பொறுத்தவரை வாஸ்து இல்லாமல் ஆயாதி இல்லை. ஆயாதி இல்லாமல் வாஸ்து இல்லை இந்த இரண்டும் ரயில் தண்டவாளம் போலத்தான் இந்த இரண்டும் இணைந்து வாஸ்து சொன்னால் மட்டுமே நிறைவடைந்த வாஸ்து ஆகும்.

நல்ல திறமையாளர்கள் என்றும் தனது கலையை உயர்த்தி பேசுவார்கள். பொறுக்க முடியாத பொறாமை குணம் படைத்த மனிதர்கள் மட்டுமே மற்றவர்களின் கலையை புறம் பேசுவார்கள். நமது சித்தர்கள் உறுவாக்கிய அரிய கலையின மனையடி ஆயாதி குழி கணக்கை அவமதிப்பு செய்வது தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வதை போன்றது.

ஆக ஆயாதி குழிகணித அளவுகள் பொய் என்று சொல்லி என்னை பிரபலப்படுத்தும் அனைத்து நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.நன்றி.

ஆயாதி இல்லாமல் இருக்கும் வாஸ்து வீடு அரை வாஸ்து வீடு என்றுதான் சொல்லுவேன்.மீண்டும் வேறு ஒரு பதிவினில் சந்திப்போம்.

Vastu & Ayathi Mathematical Vaastu
error: Content is protected !!