
ஆயாதி கணித அமைப்பில் இல்லம்
இந்த இடத்தில் அதிகப்படியான மக்கள் வாஸ்து மட்டுமே பார்த்துவிட்டு வீட்டின் மனையடி தவறு என்று விட்டு விடுகின்றனர். அப்படியே ஒருவர் கேட்டாலும் அது அந்த இல்ல குடும்பதலைவரின் காலடி என்று ஒரே வார்த்தை பதிலாக முடித்து விடுகின்றனர்.
ஆக அந்த அளவை நீங்கள் எடுக்க வேண்டிய தேவை இல்லாது போனாலும், ஒரு தவறு என்று சொல்லுகின்ற அளை ஏன் உபயோகிக்க வேண்டும். நமது பழந்தமிழர் உபயோகப்படுத்திய மனையடி குழி கணித சாஸ்திரம் என்ன சொல்லுகின்றதோ அந்த அளவினை நீங்கள் எடுத்துக்கொண்டு ஒரு இல்லத்தை அமைக்கலாமே என்பதுதான் எனது கருத்து.
இந்த இடத்தில் வேறு ஒரு கருத்தினையும் தெரிவித்து கொள்கின்றேன்.எக்காரணம் கொண்டும், வீட்டின் உள் அளவுகளைப் பொறுத்தவரை நீங்கள் சாஸ்திரம் சொல்லும் அளவுகளை எடுத்துகொண்டு அதோடு மனையடி சாஸ்திரம் முடிந்து விட்டது என்று எடுத்துக்கொண்டு தயவுசெய்து ஒரு வீட்டினை அமைக்க வேண்டாம்.
நான் சொல்லுகின்ற அடிக்கணக்கு என்பது வீட்டின் வெளிப்புற நீள அகலங்களே ஆகும்.இதனை தமிழ்நாட்டில் மூன்று வகையாக உபயோகிக்கின்றனர்.ஒருவர் 30 அங்குளம் அளவுகளையும்,தமிழ்நாட்டில் சோழநாட்டில் 34 அங்குள அளவுகளையும்,தென்தமிழ்நாட்டில் 32 அங்குள அளவுகளையும் உபயோகிக்கின்றனர்.இதனால் இந்த ஆயாதி கணிதம் என்பது காலத்திற்கு ஒவ்வாத செயல் என்றே நானும் ஒரு காலத்தில் பேசியிருக்கின்றேன்.
ஆனால் நாம் கடைபிடிக்கும் அளவு என்பது நமது சோழப்பேரரசு பயன்படுத்தி என்னற்ற ஆலயங்களை நிர்மாணம் செய்த அளவான உலகலந்தான் கோல் என்கிற ஆளவு முறையின 34 அங்குல அளவுகளை மட்டுமே பயன்படுத்தினால் பலன் என்பது ஆயாதி கணிதம் மூலமாக ஒரு இல்லத்திற்கு கிடைக்கும்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com