
ஆண் பெண் தனியாக வாழ்வதற்கு வாஸ்து காரணமா?…
ஒரு இல்லம் என்பது பாசங்களை பகிரும் பல்கலைக்கழகம் போல். இருந்தால் அதுவே குடும்பம்…இது அந்த காலத்தில் உறவுகளை இணைக்கும் பாலமாக கூட்டு குடும்ப வாழ்வு இருந்தது.
ஆசைபட்டது கிடைக்கும் உணவுகள்,அனைவரிடமும் உண்மை நிலை அன்பு, நேசமாற உறவுகள்,ஆறுதலான அரவணைப்பு, பெரியோர்களிடம் மரியாதை, பலமான பாதுகாப்பு, ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறை, பெரியவர்களின் அன்பு கலந்த கண்டிப்பு,மற்றும் ஆலோசனைகள் போன்றவை கூட்டு குடும்பங்களில் மட்டுமே கிடைக்கும்.இதற்கு வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இப்படி உறவுகளை இணைக்கும் செயலை செய்ய வைக்கிறது.
இன்றைய கணிப்பொறி யுகத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கை முறை என்பது ஏறக்குறைய காணமல் போய் விட்டது. ஆக இன்றைய உலகில் குடும்பத்தின் வகைகள் எத்தனை பரிணாமம் அடைந்துள்ளது..காலத்தின் கோலத்தில் கூட்டு குடும்பங்கள்சிதைந்து தனிகுடித்தனங்களாக உறுவாகி விட்டது.இதற்கு காரணம் என்னவென்று ஆராயும்போது ஒரு இல்லத்தில் ஆண் மற்றும் பெண் சார்ந்த திசைகளிலும் வாஸ்து சார்ந்த பிரச்சனைகள் என்பது இருக்கும்.
தனிக்குடும்பம் மாறி… தற்பொழுது பிடித்தவருடன் மட்டுமே திருமணம் செய்தாலும், மீண்டும் பிரிந்து திருமணமே செய்து கொள்ளாமல் மீண்டும் பிடித்த மற்றொரு உறவுகளோடு … வெறும் உணர்ச்சிகளை தீர்த்துகொள்ளும் தற்காலிக ஆசையான வாழ்க்கை முறை என்று… ஒருசில” குடும்பங்கள் பல பரிணாமங்களை” எடுத்துகொண்டு ஊர் விட்டு ஊரில் தனியாக வாழ்க்கை பாதையை அமைத்து கொண்டு வாழ்கிறார்கள்..அல்லது உலகிற்கு ஒரு உறவை திருமணம் செய்து கொண்டு, ஊருக்குள் ஒரு உறவை ஏற்படுத்தி உலகிற்கு தெரியாத வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். ஒருசில இடங்களில் மனைவி அல்லது கணவன் கருப்பு, ஆனால் சொத்து பத்து ஏக்கர் இதற்காக திருமணம் செய்து கொண்டு புறக்கடையில் வேறு உறவுகளோடு வாழ்ந்து வருகின்றனர். இதற்கும் வாஸ்து குற்றங்களே காரணம். ஆக கணவன் ஆகட்டும் மனைவி ஆகட்டும் உறவில் பிரச்சனையா?முதலில் அவர்களின் உறவோடு இருக்கும் நபர்களோடு சண்டை போட வேண்டாம். உங்கள் இல்லத்தை வாஸ்து துணை கொண்டு மாற்றம் செய்யுங்கள். கள்ள உறவுகள் காணமல் போய் விடும்.
மனித உற்பத்தி சார்ந்த விசயம் ஆகட்டும், பணம் சார்ந்த அசுர வளர்ச்சி ஆகட்டும், மனித வாழ்வில் கிடைத்தது என்னவோ… தனிமை, ஏமாற்றம், நம்பிக்கையின்மை, வெருப்பு, மனஉலைச்சல்.. ஆதரவற்ற அபல வாழ்க்கை, அனாதையான உலகம் என்று இப்படி அடுக்கிகொண்டே செல்லலாம்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து கனவன், மனைவியாக.. நல்ல குடும்பமாக.. சமூகத்தோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எத்தனை சௌகரியங்கள்.
மரியாதை, மதிப்பு, கௌரவம், புகழ் இவைகள் சமூகத்திற்கு கட்டுபட்டு வாழ்பவர்களுக்கு கிடைக்கும் விருதுகள்.
குடும்ப வாழ்வில் பொறுப்புகள், கடமை, வழிநடத்துதல் போன்றவை கனவன், மனைவி இருவரது ஆளுமைக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாறுபடும்.
இருவரில் ஒருவர் இல்லை என்றால் அது முழுமையற்ற போராட்ட வாழ்கையே மிஞ்சும்.
இதிலும் “ஒரு பெண் தனித்து, உறவுகளின் ஆதரவு இன்றி, சுய முயற்சியில் இன்றைய கால சூழலில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்றால் பல போராட்டங்கள், அபாயங்களை கடக்கும் வலிமை பெற்ற பெண்களால் மட்டுமே முடியும். இவர்களின் எண்ணிக்கை வெறும் சொற்பமே.” இந்த இடத்தில் எனது வார்த்தை கிறுக்கனாக இருந்தாலும் ஒரு புருசன் என்பது வேண்டும்.
விதி வசத்தால், நியாயப்படுத்தபட்ட மற்றும் நியாயப்படுத்த இயலாத பல காரணங்களால்… கனவனின் பிரிவால் குடும்பத்தின் முழுசுமையையும் ஏற்று நடத்தும் திடீர் சூழலுக்கு தள்ளபடும் போது… தண்ணிரைவிட்டு பிரிந்த கயல் மூச்சு விட முடியாமல் போல, ஒரு மகளிர் நிம்மதியாக வாழ்க்கை நடத்த படாதபாடு பட வேண்டியதாக உள்ளது என்பதே சத்தியமாக உண்மை.
மிகவும் குறைந்த வயதில் பெற்றோர் பார்த்து வைத்த திருமண வாழ்க்கையில் நுழைந்தேன்.. திருமண வாழ்க்கை கொடுத்த சந்தோஷத்திற்கு சாட்சியாக. இரு பெண் குழந்தைகளை பெற்று குழந்தைப்பேறு கிடைத்தது.
அது மட்டுமே தற்பொழுது ஆறுதல்.
இடையே என் கணவர் குடி பழக்கத் குடும்பத்தில் பொறுப்பற்ற ஜடமாக மாறியதை கண்டித்த தருணம்தான் என் சந்தோச வாழ்க்கைக்கு ஏற்பட்ட முற்று புள்ளி.
அது தொட்டு பன்நாட்டு உலக யுத்தங்களை மிஞ்சும் வகையில் என் குடும்ப வாழ்வையே புரட்டி போட்ட பிரளயங்கள் ஏராளம்.
என் கணவர் என்னை விட்டு பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன… எனக்கு ஆறுதலாக இருந்த என் தந்தையாரின் மரணம் மேலும் வேதனைபடுத்தின… சொந்தங்களும் சொத்துபறிப்பிற்காக நீதிமன்ற பொய் வழக்கையும் தொடுத்து என்னை அலைகழித்து வருகின்றன…
என் நிலையை கண்டு ஆறுதல் கூற வரும் ஒரு சில உறவின் எதிர்பார்ப்பு… பண தேவைகளுக்காககவும், என் உறவை அவர்களது விருப்பத்திற்கு பயன்படுத்தும் தவறான எண்ணமாக இருக்கின்றது…
என்கணவர்
பிறர் மீது கண்மூடி தனமாக பாசம் வைத்து ஏமாற்றம் அடைவார்.
சந்தோஷத்தையும், கஷ்டங்களையும் சமமாக உணருவார்.அதீத இறை பக்தி உடையவர்.பன்மொழி வித்தகர். குறைந்தது மூன்று மொழிகளுக்கு மேல் பேசுவார்.தனது சிந்தனைகளையும், பேச்சையும் காசாக்கும் அசாத்திய திறமை படைத்தவர்.எல்லா விஷயங்களையும் நன்கு கிரகித்துகொள்ளுவார்.பிறரை ஆளுமை படுத்துவதில் முனைப்புகாட்டுவார்.ஆனால் சட்டென்று உணர்ச்சி வச படகூடியவர்.அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு தலைவலியில் அவதியுறுவார்.பட பட வென்று பேச கூடியவர்.ஒரு கட்டத்தில் வெளியே சொல்ல முடியாத பிரச்சனைக்கு உயிரை இழந்து விட்டார்.என்று ஒருசில மகளிர் புலம்பும் வாழ்க்கையாகி விடும். இப்படி பல பெண்களின் வாழ்வில் விதி விளையாடி விடும்.
ஆக ஆம்பளை இல்லாத வீடு அரைவீடு.. இதற்குதான் சொல்வார்கள் “உறும்புவதற்கு இல்லை என்றாலும் இறும்புவதற்காவது வீட்டுக்கு ஆம்பள வேணும்னு..!”அதாவது கிறுக்கனாக இருந்தாலும் ஒரு புருசன் என்பது வேண்டும்.இதற்கு வாஸ்து என்பது கட்டாயம் வேண்டும்.