ஆண்டாள் திருப்பாவை பாசுரம்: 4

ஆண்டாள் திருப்பாவை பாசுரம்: 4
ஆண்டாள் திருப்பாவை பாசுரம்: 4

 

 

 

 

 

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, “ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் “கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே “பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக “கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

#####$$$$########$$$###

திருவெம்பாவை பதிகம்:4

ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேல் ஓர் எம்பாவாய்

விளக்கம்

நித்திலம் = முத்து. ஒண்ணித்தில = ஒள் + நித்திலம். ஒள் = ஒளி பொருந்திய. அவம் = வீணான செயல். மருந்து = அமுதம். விழுப்பொருள் = மேன்மையான பொருள். உள்ளே இருக்கும் பெண்ணுக்கும் வெளியே இருப்பவர்களுக்கு நடைபெறும் இடையே நடைபெறும் சுவையான உரையாடல் இந்த பாடலில் வெளிப்படுகின்றது.

பொருள்

முத்து போன்று ஒளி வீசும் பற்களை உடையவளே, இன்னும் உனக்கு பொழுது புலரவில்லை போலும் என்று வீட்டிற்கு வெளியே இருந்த பெண்கள் கேட்க, வீட்டினில் உள்ளே இருந்த பெண் படுக்கையில் இருந்தவாறே, வரவேண்டிய பெண்கள், கிளியின் நிறத்தையும் மென்மையான மொழியையும் கொண்ட பெண்கள், அனைவரும், வந்துவிட்டார்களா என்று கேட்கின்றாள். அவளது கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக, சற்றுப் பொறுத்துக் கொள்வாய், நாங்கள் எண்ணிச் சொல்கின்றோம் என்று முதலில் பதில் அளிக்கின்றார்கள். சென்ற மூன்று பாடல்களில் தாங்கள் எழுப்பித் தங்களுடன் சேர்த்துக்கொண்ட பெண்கள் எவரும், அனைவரும் வந்தனரா என்ற கேள்வியைக் கேட்கவில்லை. எனவே இந்த பெண்ணின் கேள்விக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற சந்தேகம், வெளியே உள்ள தோழிகளுக்கு எழுகின்றது. ஒருக்கால், வெளியில் இருப்பவர்கள் எண்ணி முடிக்கும் வரையில், தான் மறுபடியும் சிறிய தூக்கம் போடுவதற்காக இந்த கேள்வி எழுப்பட்டதோ என்ற ஐயம் எழவே, தாங்கள் எண்ணுவதை நிறுத்திவிட்டு பின்வருமாறு கூறுகின்றார்கள். தோழியே, மறுபடியும் தூங்க ஆரம்பித்து உனது காலத்தை நீ வீணாக கழிக்காதே. தேவர்கள் அமுதம் அருந்துவதற்காக தான் நஞ்சை உண்டதால் அவர்களுக்கு அமுதம் போன்றவனும், வேதங்களில் குறிப்பிடப்படும் மேம்பட்ட பொருளாகவும், எங்களது கண்ணுக்கு இனியவனாகவும் உள்ள சிவபெருமானின் புகழினைப் பாடி, உள்ளம் கசிந்து உருகும் நிலையில் உள்ள நாங்கள், எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவதில் நேரத்தை வீணாக்கமாட்டோம். நீயே வெளியே வந்து எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவாயாக.

எண்ணி முடித்த பின்னர் எவரேனும் வரவில்லை என்பதை உணர்ந்தால், நீ மறுபடியும் சென்று உறங்கலாம்.

மார்கழி நோன்பு,
மார்கழி திருநாள் பாசுரம்,
முன்னேற்றம் தரும் மார்கழி ,
Sri ANDAL’S Tiruppavai Pasuram ,
நாச்சியார் திருமொழி,
Magazhi vazhipadu,
ஆண்டாள் பாடிய பாசுரங்கள்,
திருப்பாவை பாசுரம் ,
திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள்,
திருப்பாவை, திருவெம்பாவை,
செல்வச்செழிப்பு தரும் திருப்பாவை,
திருப்பாவை பாடல் வரிகள்,
திருவெம்பாவை பாடல்,
மார்கழி பாவை நோன்பு,
திருப்பாவை பாடல் வரிகள்
திருப்பாவை பாடல் 1,
திருப்பாவை பாடல் 3,
திருவெம்பாவை பாடல்கள் mp3,
திருப்பாவை பாடல் 5 விளக்கம்,
திருப்பாவை பாடல் 21,
thiruppavai padalgal in tamil,
திருப்பாவை பாடல் விளக்கம் pdf,