அவினாசியப்பர் ஆலய சிறப்புகள்,அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்,

avinashi lingeswarar
avinashi lingeswarar

திருப்புக்கொளியூர் ஆலயம்

இந்த ஆலயம் கோவையில் இருந்து40கிமி தொலைவிலும்,திருப்பூர் நகரத்தில் இருந்து 15கிமி தொலைவில் உளாளது.தட்சணவாரணாசி என்றும் பெயர் உண்டு. இறைவன் பெயர் அவினாசி அப்பர் இதுவே ஊர் பெயராக மாறிவிட்டது.சிறுவன் ஒருவன் முதலை வாயுட் புகுந்து மடிந்து  விட சுந்தரர் பெருமான் திருபதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புத பதி.இந்த ஆலயத்தில் மிகச்சிறப்பு அம்சமாக விநாயக பெருமான் குபேர விநாயகராக வடக்கு பார்த்த நிலையில் இருக்கின்றார்.கொங்கு நாட்டில் உள்ள தலங்களில் திருவாசகம்  பாடப்பட்ட தலமும் இதுவே.

 

காசியினும் வீசம் அதிகம் என்பர்.இந்த ஆலயத்தின் அருகில் மிகப்பெரிய பிரமாண்டமான குளம் உண்டு.அதில் தான் முதலை உண்ட பாலகனை மீட்ட நிகழ்வு நடந்தது அதன் அடிப்படையில் சுந்தரர் பெருமானுக்கு அங்கு ஆலயம் உண்டு.

இறைவன் பெயர்:பெருங்கேடிலியப்பர்.

இறைவி:கருணாம்பிகை அம்மை.

 

இங்கிருந்து தான் இப்பகுதியின் சுற்றுவட்டார ஆலய நிகழ்விற்கு தீர்த்தம் எடுத்து செல்வார்கள்.
ஆலய பலன்:
தத்து கொடுத்தல் இங்கு சிறப்பு.அந்த வகையில் ஒரு வீட்டில் ஆண்பெண் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு குடும்பத்தில் தத்து கொடுக்கும் போது அந்த குடும்பம் சிறப்பு பெறும்.
இங்கே இருக்கும் இறைவனை வணங்கும் போது உறுதியாக பிறவா தன்மை கிடைக்கும்.

Avinashi Eswarar(Avinashinathar, perunkediliyappar)
Avinashi Eswarar(Avinashinathar, perunkediliyappar)

பூஜை தியானம் எப்படி வணங்குவது போன்ற தெரியாத நபர்கள் கூட இங்கே இருக்கும் இறைவனை வணங்கும் போது உடனடியாக அருள் கொடுப்பார்.திருட்டு தோழில் சேய்த நபர்களுக்கு கூட இறைவன் அருள் கொடுத்ததாக கூட தகவல் உண்டு.இந்த ஆலயத்தின் அம்மை கருவறையில் பின்புற சுவரில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பரிகாரமாக விருச்சிகம் உள்ளது.கட்டாயமாக இந்த ராசிக்காரர்கள் வணங்கும் போது அற்புதமானவாழ்வு வாழ முடியும்.