அதிர்ஷ்ட தேவி வழிபாடு

அதிர்ஷ்டம் அழைக்கிறது.

அதிர்ஷ்ட தேவி வழிபாடு
அதிர்ஷ்ட தேவி வழிபாடு

 

 

 

 

 

 

 

 

 

நீங்கள்
விரும்பியதை அடையலாம்.
மனித மனம் என்பது ஒரு நிமிடத்திற்கு கோடிக்கணக்கான வேகம் கொண்டது. அந்த வகையில் உங்கள் மனதில் ஒன்றை நினைக்கிறீர்கள் என்று சொன்னால் அது நல்ல எண்ணங்களாக இருந்தாலும் சரி, தவறான எண்ணங்கள் இருந்தாலும் சரி, திரும்ப அதே வேகத்தில் நம்மிடம் வந்து சேர்கிறது.
ஒரு காட்சியை மனத்திரையில் பார்க்கின்றீர்கள். அதை மனதால் திரைக்கதை போல, அதாவது சினிமா திரையில் பார்ப்பது போல காட்சிகளை மீண்டும் கற்பனையில் பார்த்து கொல்லமுடியும். நாம் ஒரு இடத்திற்குச் செல்கிறோம் அதாவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு செல்வது பல கற்பனை செய்யும் பொழுது, ஏற்கனவே அந்த இடங்களுக்கு சென்றுவந்த காட்சியை கற்பனையால் போய் வந்த இடங்களின் ஞாபகம் என்பது திரும்ப கற்பனையாக வரும். அதுபோல நமக்கு வேண்டியதை கற்பனை கொண்டு செயல் படுத்தி, ஆற்றல்களை முறைப்படுத்தி நமது வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தினால் நீங்கள் விரும்பியது அடையலாம்.
ஆகவே ஒருவருக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும், கஷ்டங்களுக்கும் தீர்வு வேண்டுமென்றால் நமது உள்மனதின் உணர்வு எண்ணங்களை தட்டியெழுப்பி நமது விருப்பத்தை அதனிடம் சொல்லிவிட்டால் அதில் செயல்பட்டு உங்களுக்கு வேண்டியதை செய்து தருகின்றது. ஆனால் இந்த இடத்தில் நமது விருப்பம் என்பது நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

அதாவது உங்களுடைய தேவைகளை மனத்திரையில் ஒரு வகை காட்சியாக இடைவிடாது படித்து வர வேண்டும். அது சார்ந்த வசதிகள் எனக்கு கிடைத்தால்,எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். இன்று எண்ணிக் கொண்டே வரவும் அது நாளடைவில் உங்களுக்கு வந்து சேரும்.
எடுத்துக்காட்டாக தற்சமயம் உங்களுக்கு கடன் தொல்லைகள் இருக்கின்றன . வருமானம் குறைவாக இருக்கிறது.
ஆகவே உங்களுக்கு தற்போது பணம் மட்டுமே, இதனால் உங்களுடைய பணம் சார்ந்த எண்ணத்தை உங்கள் மனதில் வையுங்கள். ஒரு 15 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது என்று சொன்னால் , அந்த கடன் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எனக்கு ஒரு இருபது லட்ச ரூபாய் வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.

ஆக ஏற்கனவே இருக்கும் 15 லட்ச கடனில் பத்து லட்சத்தை கட்டி விட்டு மீதி பத்து லட்சத்தில் ஒரு தொழில் செய்வேன் என்ற எண்ணத்தை வையுங்கள். இந்த எண்ணத்தை ரெகுலராக உங்களுடைய மனத்திரைக்கு படிக்க கொடுங்கள். நான் தற்போது நல்ல தொழில் செய்து சௌகரியமாக வாழ்கின்றேன் என்று எண்ணிக் கொண்டு வாருங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்களுடைய எண்ணங்கள் உண்மையானதாக மாறிவிடும். இதனைத்தான் வெளிநாட்டு மக்கள் ஈ எஸ் பி என்றும், தாந்திரீக சக்திகள் என்றும் சொல்கிறார்கள். இதுவே தூங்கிக்கொண்டிருக்கும் நமது உணர்வு சக்தியை தூண்டிவிட்டு நமக்கு தேவையானதை பெறக்கூடிய ரகசியமாகும். இதனையே நாம் அதிர்ஷ்டம் அழைக்கிறது என்கின்றோம்.

error: Content is protected !!