
அப்பா கட்டிய வீட்டை இரண்டு சகோதரர்கள் இரண்டாக பிரித்து தனித்தனியாக குடி இருக்கலாமா?
அப்பா அம்மா கட்டிய வீட்டை சகோதரர்கள் ஆகிய நாங்கள் தற்போது இரண்டாக பிரித்து நானும் எனது தம்பியும் குடியிருந்து வருகிறோம்.இதில் எனது தம்பி கஷ்டம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால், நான் பலவிதமான கஷ்டங்கள் அனுபவித்து வருகின்றேன்.ஆகவே இதற்கு வாஸ்து ரீதியாக தீர்வுகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறும் மக்களுக்காக இந்த பதிவை வழங்குகிறேன்.
இரட்டை குழந்தைகள் ஒன்றாக பிறந்து இருந்தாலும், அவர்களின் குணங்களும், நடவடிக்கைகளும் சிந்தனைகளும் வேறு விதமாக தான் இருக்கும்.ஜோதிட ரீதியாக பார்த்தாலும் இரட்டை குழந்தை ஜாதகத்தில் கூட கிரகத் நட்சத்திர தொடர்புகள் என்பது வேறு தனித்தன்மையை பெற்றுத்தான் இருக்கும். உலகில் ஒருவரைப்போல ஏழு நபர்கள் இருந்தாலும், ஒரே மாதிரி வீட்டில் வாழ்கின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.அப்படி வாழ்வது என்பதும் வாஸ்து ரீதியாக தவறு ஆகும்.
இரண்டு வீடுகள் பக்கத்தில் இருந்தாலும்,அது அண்ணன் தம்பியாக இருந்தாலும், வீட்டிற்கு சுற்றுச்சுவர் என்பது தனித்தனி அமைப்பு என்பது வேண்டும். அதாவது பக்கத்து வீட்டின் கிணறு மற்றும் போர் மற்றும்செப்டிக் டேங்க், தண்ணீர்த்தொட்டி போன்ற கட்டிட அமைப்பு எதாவது ஒரு வீட்டிற்கு எதிர்மறை செயல்களை கொடுக்கும்.
தலைவாசல் தனித்தனி அமைப்பாக வேண்டும் என்பதற்காக அப்பா கட்டிய வீட்டில் திறப்பாக இருக்கும் இடத்தில் கதவு எடுத்து விட்டு மூடிவிடுவார்கள்.அல்லது அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே காம்பவுண்ட் கேட் அமைந்துவிடும். இதனால்
இரண்டு வீட்டிற்கும் சேர்த்து ஒரே இடத்தில் இருக்கும் சுற்றுச்சுவர் கதவு என்பது ஒருவருக்கு நீச்சப் பகுதிக்கு சென்று விடும்.
நமது முன்னோர்கள் ஏற்படுத்திய செயல் என்பது அண்ணன் மேற்குபுறமும்,தம்பி கிழக்குப்புறமும் இருந்தால் நல்லது என்பதற்காக வீட்டை இரண்டாக பிரித்து அண்ணனை மேற்குபுறத்தில் அல்லது தெற்கு புறத்தில் இருப்பார்கள். இது வாஸ்து ரீதியாக சரியா என்றால் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.அப்படி அவர்களின் இல்லம் மேற்குப்புறத்தில் இருக்கும்போது கிழக்கு மூடப்பட்ட பகுதியாகவும் தெற்கு புறத்தில் இருக்கும் பொழுது வடக்கு மூடப்பட்ட பகுதியாகவும் அமைந்து விடும். இதனால்அந்த வீட்டின் முதல் குழந்தையும், அல்லது மேற்கு புற வீட்டில் இருக்கும்பொழுது இரண்டாவது குழந்தையும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையை வாஸ்து ரீதியாக கொடுக்கும். எந்த ஒரு வீட்டிலும் கணவன் அல்லது, மனைவி அல்லது மகன் மற்றும், மகள் இவர்கள் முதல் குழந்தையாக இருக்கும் போது அவர்களின் வாழ்வில் வாஸ்து தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரே வீட்டில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை என்பது ஒருவருக்கு எதிர்மறை பலன்களையும், ஒருவருக்கு நல்ல பலன்களை கொடுக்கும். ஆக வீடு என்பது வாஸ்து ரீதியாக அமைக்கும் பொழுது ஒரு இல்லத்தில் இருக்கக்கூடிய முதல் குழந்தையாக இருந்தாலும் சரி, இரண்டாவது குழந்தையாக இருந்தாலும் சரி, அவ்வீட்டில் வசிப்பவர்கள் அனைவருமே அற்புதமான வாழ்க்கை வாழவேண்டும் என்று சொன்னால், எக்காரணம் கொண்டும் அண்ணன் தம்பியாக இருப்பவர்கள் ஒரு வீட்டை இரண்டாக பிரித்து அதில் வாழ்வது என்பது மிக மிக தவறானது.