வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா ?ஆயுள் பெருகுமா ?

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா ?ஆயுள் பெருகுமா ?

 

 

 

 

 

இந்த இடத்தில் நான் சொல்வது பணம் என்றால் எவ்வளவு வேண்டும்?
ஆயுள் என்றால் எதுவரை?
பணத்தின் மூலமாக அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்து விட்டால் சந்தோசம் வந்து விடுமா?

உடல்நலம் குன்றி கட்டிலில் கிடந்து யாரும் நம்மை பார்க்காமல்,
உறவுகள் யாரும் இல்லாமல் இறந்தபிறகு சொல்லுங்கள் இறந்த உடலை பெற்றுக்கொள்ள வருகின்றேன் என்று சொல்கின்ற மக்களை பெற்று
#துன்பத்தில் வாழ்ந்து கஷ்டப்பட்டு நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் பயன் உண்டா ?

ஆக நம்முடைய வாழ்வு அப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்கக்கூடாது என்றால்,வாஸ்து இந்த இடத்தில் கட்டாயம் வேண்டும். பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒரு நெருக்கடியான வாழ்வு வாழக்கூடாது. அதற்கு கட்டாயமாக #வாஸ்து துணை செய்யும்.

இது எப்படி என்றால் வாஸ்து படி வீடு இருக்கின்ற பட்சத்தில் நீங்கள் எந்த விதத்திலும் பணத்திற்காக சிரமப்படும் நிலை இருக்காது..ஆனால் வாஸ்து படி வீடு அமைந்தால் உடனடியாக மாதம் பத்து லட்சம் ரூபாய்கள் சம்பாதிப்போம் என்று சொல்வது முழுக்க முழுக்க பொய்யான வார்த்தைகள் ஆகும்.

வாஸ்துபடி உள்ள வீடு என்றும் பணகஷ்டத்தினை கொடுக்காது. அப்படியே கொடுத்தாலும் அதை சமாளிக்க உதவும் அமைப்பில் மட்டுமே அந்த வீடு கொடுக்கும்.

அதேபோல பலவிதமான நோய்களால் நூறு ஆண்டுகள் வாழ்வதை காட்டிலும் எந்தவிதமான நோய்களும் இல்லாமல், எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியமான சந்தோசமான எந்த மனிதர்களையும் நமது இறுதி காலம் வரை நாம் சார்ந்து வாழாது, தனித்தன்மையாக வாழக்கூடிய,மற்றும் நமது உறவுகள் நம்மை மிகுந்த அன்புடன் பார்த்துக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஒரு வாஸ்து வீடு உறுதியாக கொடுக்கும்.

எத்தகைய மனிதர்களும்,இயற்கை சக்திக்கு தலை வணங்கியே தீர வேண்டும். இயற்க்கையை வெல்ல வேண்டும் என்கின்ற ஆசையை விட அதன் ரகசியங்களை நாம் அறிந்து அவற்றினை எதிர்த்து ஒரு வேலையை செய்யாமல்,

அதாவது சாதாரணமாக சொல்ல வேண்டும் என்றால்,பஞ்சபூதங்களை நம் வீட்டிற்கு அழைத்து பஞ்சபூதங்களை வசியப்படுத்தி நம்முடைய வாழ்க்கையில் உறவு மற்றும் பணம் சார்ந்த நிகழ்வுகளில் மிகப்பிரமாண்டமான வசியசக்தி பெற்று பெருவாழ்வு வாழ வாஸ்து மிகமிக முக்கியம்.ஒரு வீட்டின் வாஸ்து மாற்றங்களை ஒரு முழு நேர வாஸ்து நிபுணரை வைத்துக்கொண்டு செய்வது தவறு இல்லாமல் சரியாக செய்வதற்கு வழிவகுக்கும்.
அதாவது வாஸ்து கலையை சரியான நபர் மூலம் நீங்கள் உள்வாங்கி உங்கள் வீட்டின் அமைப்பை சரி செய்யவில்லை எனில் வாஸ்து பொய் என்கின்ற எண்ணத்திற்கு நீங்கள் வரக்கூடிய சூழ்நிலை ஆகிவிடும்.

எந்த தொழிலில் ஒருவர் இருந்தாலும் ஒரு தொழிலில் மட்டுமே அவர் சிறப்பு பெற முடியும்.இது எப்படி என்றால், மருத்துவர்கள் பொதுவாக மருத்துவம் படித்தவர்கள் இருந்தாலும்,
கண்களுக்கென்று சிறப்பு வாய்ந்த மருத்துவர்களும், எலும்புகளுக்கென்று தனியாக மருத்துவர்களும்,குழந்தை பிறப்பிற்கு தனியாக மருத்துவர்களும், இதயம் சம்மந்தபட்ட துறைக்கு தனியாகமருத்துவர்களும் இருப்பதைபோல இப்படி ஒவ்வொரு துறைக்கும் Specialist இருப்பார்கள் அவர்களை அனுகும்போது அதற்கான தீர்வுகள் நாம் உடனே எதிர்பார்க்கலாம்…
ஆக நீங்கள் சரியாக முடிவு எடுக்கவில்லை எனில் இந்த இடத்தில் வாஸ்து பொய்யாகிவிடும்.