எட்டு திசைகளில் தென்கிழக்கு திசைக்கு வாஸ்து.

தென்கிழக்கு திசைக்கு வாஸ்து

தென்கிழக்கு திசைக்கு வாஸ்து
தென்கிழக்கு திசைக்கு வாஸ்து

 

 

 

 

 

 

ஒரு இல்லத்தில் கிழக்கு திசையும்,தெற்கு திசையும் இணையும் பகுநியே தென்கிழக்கு ஆகும். இதனை அக்னி திசை என்று நமது புராணங்கள் கூறுகின்றன.அதேபோல ஜோதிட அமைப்பில் சுக்கிரன் சார்ந்த கிரகம் இந்த இடத்தினை ஆளுமை செய்கின்றது.இதனை ஜோதிட அமைப்பில் ஆண்களுக்கு சுக்கிரன் பெண்களுக்கு செவ்வாய் என்ற ஒரு சொல் உண்டு. அந்தவகையில் இது பெண்கள் குடியிருக்கும் இடமாக உள்ளது.

இந்த இடத்தை சமையல் அறைக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கழிவறை சார்ந்த அமைப்பை ஏற்படுத்தக்கூடாது. இந்த பகுதி மொத்த மனையின் உட்பகுதியில் தென்மேற்கு பகுதிக்கு சற்று தாழ்ந்த அமைப்பாக அமைக்க வேண்டும். இங்கே சமையல் அறை இருக்கும் போது கட்டாயமாக இந்த அறைக்கு தென்கிழக்கில் மற்றும் வடகிழக்கில் ஜன்னல் அமைப்பு வேண்டும்.

எக்காரணம் கொண்டும் தென்கிழக்கில் உள்ள பகுதியை முக்கிய படுக்கையறையாக உபயோகப்படுத்தக்கூடாது.
இதனால் விரைய செலவுகள் மற்றும் அதிகப்படியான மருத்துவ செலவுகள் ஏற்படும். எனது வாஸ்து பயணத்தில் நான் பார்த்த வகையில் இங்கு செய்யக்கூடிய சிறிய தவறுகளும், பெரிய தவறுகளும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது. இன்று இந்தியாவில் அதிகப்படியான சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர்.நோய் வரும்முன்பே தென் கிழக்கு வாஸ்து அமைப்பிற்கு கொண்டு வரும் நிலையில் சர்க்கரை நோயை தவிர்க்க முடியும். ஆனால் காலத்திற்கு ஆதனை செய்ய வேண்டும்.

ஆக ஒரு இல்லத்தின் சண்டை சச்சரவுகளுக்கு,மருத்துவத்திற்கு செய்யும் விரைய செலவுகளுக்கு தென்கிழக்கில் உள்ள தவறுகளே காரணம் ஆகும். இந்த இடம் மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் இருக்கும் போது சண்டை சச்சரவு இல்லாத வீடாக, சுபகாரியங்களில் தடை ஏற்படுத்தாத வீடாக, குடும்ப உறுப்பினர்கள் அனைத்து விதமான அபிலாசைகளை நிறைவேற்றி கொடுக்கும் இல்லமாக விளங்கும். ஒருசில கணவன் மனைவி இடையே உடல் சார்ந்த உறவுகள் தான் சண்டை சச்சரவுக்கு காரணம்.இதனை நிர்வகிப்பதும் தென்கிழக்கில் இருக்கும் வாஸ்து தவறுகளே.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.