வாஸ்து ஆலோசனை எந்த இடத்தில் வேண்டும்

வாஸ்து ஆலோசனை எந்த இடத்தில் வேண்டும்

எந்த இடமாக இருந்தாலும், நாம் வாங்குவதற்கு நாம் விற்பதற்கு முன்பு கண்டிப்பாக வாஸ்து ஆலோசனை தேவை.

ஏனெனில் ஒரு இடத்தை விற்பதற்கும் வாஸ்து ஆலோசனை தேவை.

ஏனென்று சொன்னால் அது ஒரு மிகச்சிறந்த தெருக்குத்து இடமாக இருந்தால் அவர்கள் நேரம் அந்த இடம் அவரைவிட்டு செல்லக்கூடிய நிலை இருக்கும். அல்லது அந்த இடத்தில் தவறான கட்டிட அமைப்பு இருக்கும்.

அப்பொழுது அந்த இடத்தை விட்டு செல்லக்கூடாது என்றால் அந்த கட்டிடத்தின் வாஸ்து குறைபாட்டை சீர்திருத்திக் கொள்ள வேண்டுமெனில் வாஸ்து ஆலோசனை தேவை.

வீடு, கடை, தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கல்லூரிகள், உணவு விடுதிகள், மற்றும் இதர எந்த கட்டிடங்களாக இருந்தாலும், கட்டிடம் கட்டுவதற்கு முன்பு வாஸ்து ஆலோசனை மிகவும் அவசியம்.

பழைய கட்டிடங்கள், வீடு, தொழிற்சாலைகள், பள்ளிக் கல்லூரிகள் வாங்கும்போது வாஸ்து ஆலோசனை தேவை.

தொழிற் முடக்கங்கள், பணக்கஷ்டம், குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கஷ்டங்களின் பலன் அறிவதற்கும், தவறு இருக்கும்போது மாற்றியமைக்க வாஸ்து ஆலோசனை அவசியம்.

பூமிக்கு அடியில் கட்டிடம் கட்டும்பொழுது இந்த இடத்தில் கட்டிடம் கட்டலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்ய வாஸ்து அவசியம்.

நமது நிலத்தை ஒட்டியுள்ள நிலம் வாங்கவேண்டுமா அல்லது வேண்டாமா என்று பார்க்கும்பொழுது வாஸ்து அவசியம்.

நாம் குடியிருக்கும் வீட்டை அல்லது கட்டிடங்கள், தொழிற்சாலைகள், நமது தேவைக்கு கூடுதலாக கட்டிடம் அமைக்கும்பொழுது, கட்டிடம் அமைக்கும் முன் வாஸ்து ஆலோசனை அவசியம்.

இந்த இடத்தில் கொத்தானருக்கு தெரியும் என்று விட்டுவிடக்கூடாது. கண்டிப்பாக வாஸ்து ஆலோசனை தேவை.

வாடகை வீடு சரியாக உள்ளதா என்று முடிவு செய்யும்பொழுது வாஸ்து நிபுணர் ஆலோசனை தேவை.

பாகப்பிரிவினை செய்யும்பொழுது யாருக்கு எந்த இடம், எந்த மாதிரி வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி வாஸ்து நிபுணர் ஆலோசனை தேவை. நமது இடத்தின் ஒரு பகுதியை விற்றால் சரியாக இருக்குமா என்பது பற்றி வாஸ்து ஆலோசனை அவசியம்.

வாஸ்து என்பது இந்து மதம் சம்மந்தப்பட்ட விசயம் அல்ல. இது அனைவருக்கும் பொதுவானது.

எந்திர மந்திரம் தந்திரம் தாயத்து பூஜை ஹோமம் போன்ற விசயத்திற்கு இதில் இடமில்லை. அதனால் இது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இதனால் இதை அனைத்து இன மக்களும் வாஸ்து பார்க்க வேண்டும், அதை கடைபிடிக்க வேண்டும், இதனால் வாஸ்து ஆலோசனை என்பது அனைத்து இன மக்களுக்கும் அவசியமாகிறது.

Vastu advice
Vastu advice