நனவாகும் கனவு இல்லம் : 5 

Dream home vastu
Dream home vastu

கனவு இல்லம்

நனவாகும் கனவு இல்லம் என்ற தலைப்பில் வீடு எப்படி கட்டுவது என்பது பற்றி எழுதி வருகிறேன். அந்த வகையில் தற்போதய இக்கட்டுரையில், இதுவரை பத்து அடிவரை வீடு வந்து விட்டது. இனி இதற்கு மேல் கான்கிரீட் வேலைகள் தான்.அதனைப் பற்றி தற்போது விளக்குகின்றேன்.

வீட்டின் உள்தரையில் இருந்து கான்கிரீட் அடிமட்ட உயரம்10.5 அடிக்கு குறையாது இருக்க வேண்டும்.இந்த இடத்தில் கான்கிரீட் கீழே சுவரின் மேல் ஒரு அரை அடி அளவில் ஒரு பீம் கட்டாயம் வேண்டும். சில இடங்களில் 4 அல்லது5வரிகள் செங்கல் குத்துக்கல் வரிசையாக வைப்பார்கள். ஆனால் பீம் இருப்பது தான் சிறப்பு.அதாவது roof level beam என்று சொல்லுவார்கள்.

அடுத்த படியாகroof slab concrete போடுவதற்கு சென்டரிங் (centering) வேலைகள் செய்து முடித்த பிறகு கம்பிகளை பரப்பி கான்கிரீட் போட வேண்டும். இது கான்கிரீட் போட்ட நாளில் இருந்து21 நாட்கள் சென்டரிங் பிரிக்கக்கூடாது. 

Stair case ஏன்மாறு சொல்லுகின்ற மாடிப்படிகள் அமைப்பதை கூரை ஸ்லாப் கான்கிரீட் போடும்போது தொடர்ந்தபடியாக போட்டு விடுதல் சிறப்பு. ஏனெனில் மேல் மாடிகளுக்கு பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தி கொள்ள உபயோகப்படும்.

கனவு இல்லம்
கனவு இல்லம்

கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்

கீழே சென்டரிங் பைப் நிறுத்துகிற போது அதன் தரைத்தளம் ஒன்றறை ஜல்லி போடப்பட்ட தளமாக இருக்க வேண்டும். ஏனெனில் முட்டு கொடுக்கும் தூண் பைப் கீழே பூமியில் பதிந்து விடும் கான்கிரீட் போடும் சமயத்தில் இதனால் அந்த இடத்தில் கான்கிரீட் தொங்கும் அமைப்பாகி விடும்.

மேலே கான்கிரீட் போட உதவும் சென்டரிங் தளம் மட்டம் பார்க்க வேண்டும். இது வாஸ்து அமைப்பில் தென்மேற்கு உயர்ந்த அமைப்பாக இருத்தல் வடகிழக்கில் தாழ்ந்த அமைப்பாக இருத்தல் அவசியம்.

கம்பிக்கும் சென்டரிங் சீட் இடையில் பேவர் பிளாக் கற்கள் கொண்டு தூக்கிய அமைப்பாக இருத்தல் அவசியம்.இதனால் கம்பிகள் கான்கிரீட் இடையில் கனகச்சிதமாக சரியான இடத்தில் இருக்கும்.

எல்லா இடங்களிலும் மெல்லிய கம்பிகள் binding wire கொண்டு கட்டப்பட்டு உள்ளனவா என்று சரிபார்த்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் காங்கிரட் உட்கார கூடிய நான்கு புறங்களில் கம்பி கிராங் அடித்து போட வேண்டும். அவைகள் இடையில்  சிலாப் இரட்டை அமைப்பில் இரக்கைகள் போல் இருக்கும் இது படுத்த அமைப்பில் இருக்க கூடாது.

எலக்ட்ரிக் வேலைகளுக்கு ,  மின்விசிறி தொட்டில் ஊக்குகள் சரியான இடங்களில் விடப்பட்டு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும். கம்பிகள் கான்கிரீட் வேலைகளுக்கு ஸ்லாப் பரப்புவதற்கு 8mm மற்றும் 10 ஆக இருக்க வேண்டும்.கான்கிரீட் கலவை அமைப்பு என்பது 1:2:4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மாடி அடுத்த அமைப்பில் எடுகாகின்றோம் என்றால் ஸ்டேச்சரல் இஞ்சினியர் துணைகொண்டு பீம் கம்பி அளவுகளை வாங்கி விடுவது நல்லது.அடுத்த எனது கட்டுரையில் மேலும் பல தகவல்களை வீடு சார்ந்த தகவல்களை தருகின்றேன்.

blue lake house
contemporary interior with purple classic sofa – rendering. the image on background is a my photo

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)