வீட்டின் வெளிப்பகுதியில் சாலைகள்.

இல்லத்தின் வெளிப்பகுதியில் சாலைகள்.

Location of road for vastu
Location of road for vastu

 

 

 

 

 

 

 

 

 

       இதனை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அந்தவகையில் ஒரு மனைக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சாலைகள் இருக்கும் போது வாஸ்து அமைப்பில் இது முதல்தர மனையாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட மனையில் வசிக்கும் கணவன் மற்றும் மனைவி மிகவும் ஒற்றுமையாக வாழ்வார்கள். மிகவும் சந்தோசமாக வாழ்க்கை நடத்தும் விதமாக வாரிசுகள் உருவாகுவார்கள்.பத்துவிதமான வாஸ்து சார்ந்த நல்ல பலத்துடன் இருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சாலை இருக்கும் மனையாக இருந்தாலும், அம்மனையின் வாஸ்து சார்ந்த ஒரு குற்றங்கள் கூடினாலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உளாள சாலைகளின் பலன்கள் குறைந்து விடும்.

ஒரு இல்லத்திற்கு வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலை இருக்கும் மனையும் நல்ல மனையாக வாஸ்து அமைப்பில் வந்துவிடும்.. ஆனால் அது மேற்கு புறத்தில் செல்கின்ற சாலை நேராக வடக்கு நோக்கிய அமைப்பில் செல்வது தவறு.

இந்த அமைப்பாக உள்ள மனையில் வசிக்கும் மக்கள் மருத்துவராக, சட்ட வல்லுனராக, வியாபார நுணுக்கமான மனிதர்களாக இருப்பார்கள்.

தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் சாலைகள் இருக்கும் இல்லம் என்பது நல்ல வாஸ்து அமைப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் தெற்கு பகுதியில் போகும் மனை என்பது நேராக கிழக்கு செல்கின்ற போது கொஞ்சம் தவறான பலன்களை கொடுக்கும்.

ஒரு மனைக்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைகள் செல்லும் போது ,அந்தமனை வாஸ்து விதிகளின் படி தவறான பலன்களை கொடுக்கும். இந்த மனைகளை மிகச்சிறந்த வாஸ்து விதிகளுக்கு இருக்கும் போது அந்த இடத்தின் தவறான பலன்கள் மட்டுப்படுத்தப்படும். இந்த மனை ஏற்கனவே கட்டப்பட்ட நிலையில் இருந்து அதில் வசித்து வரும்போது ஒரு மிகச்சிறந்த வாஸ்து நிபுணரை ஆலோசித்து மாற்றங்களை செய்து கொள்வது மிகவும் நல்லது.