வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வையை எப்படி சரி செய்வது?

vastu for street focus
vastu for street focus

 வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வை

கண் திருஷ்டி படுகிறது என்பது உண்மைதானா..?அதேபோல வீட்டின் மீது ஏற்படும் தெருபார்வையை எப்படி சரி செய்வது?.

அதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி…?
 “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இந்த பழமொழி காலம்காலமாக சொல்லி வரும் பழமொழி ஆகும்.ஒருவரின் எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி.  ஆகும்.இதில் தவறான எண்ணங்களும் உண்டு, நல்ல எண்ணங்களும் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்கள் மற்றும் நாம் வளர்க்கின்ற ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கும் உண்டு.ஏன் நாம் குடியிருக்கும் இல்லங்களுக்கும் உண்டு.
 ஒரு மாமரத்தில் மாங்காய்கள் நன்றாக காய்த்து இருந்தது. அவ்வழியாக சென்ற ஒருவனின் தவறான கண் பார்வை மாங்காய்கள் மீது பட்டது.   அதன்பிறகு நன்றாக இருந்த மரம் அதன் செழிப்பை இழந்து, காய்களில் ஒருவித பூச்சி தாக்குதல் ஏற்பட்டு  அனைத்து காய்களும் கீழே உதிர்ந்து விழுந்து விட்டது. அதே நேரத்தில் தோப்பின் உட்பகுதியில் இருந்த மற்ற மரங்களின் காய்கள் நன்றாக இருந்தன. 

 

இதைத்தான் கண் திருஷ்டி தோஷம் என்று அழைக்கின்றனர். ஆக கல்லால் அடித்து இருந்தால் நாலைந்து  மாங்காய்கள் மட்டுமே சேதமடைந்து இருக்கும். ஆனால் கண்ணடி பட்டதால் முழு மாங்காய்களும் கீழே விழுந்து சேதமாகி விட்டது.

 

 ஆக ஒரு இல்லத்தின் தெருப்பார்வை என்று சொல்லக்கூடிய திருஷ்டி உள்ளதை எப்படி தெரிந்து கொள்வது?அல்லது எப்படி உணருவது?
நமது  இல்லத்தின் திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை  ஒருசில அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
 பார்வை தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், காரியத்தில் தடைகள்,  பிரிவு சார்ந்த இழப்புக்கள்,  மற்றும் தொழில் நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சிரமங்களை கொடுத்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சனை முடிவதற்குள் மற்றொரு  பிரச்னை தொடர்ந்து வரும். 

பெண்களுக்கு உடல் நோய்கள் மற்றும் மனச்சோர்வு, கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத சண்டை சச்சரவு ,  உறவுகளில் சந்தேகங்கள், உறவினர்களின் உறவுநிலையில் பகை, சுபநிகழ்ச்சிகளுக்கு தடை, குடும்பத்தில் உள்ள உறவுகளுக்கு அடிக்கடி உடல் நலப் பாதிப்பு அடிக்கடி மாற்றி மாற்றி ஏற்படுதல். வீட்டில் சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது,  தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவது போன்ற தொந்தரவுகளை கொடுக்கும்.  ஒரு வீட்டில் தவறான தெருப்பார்வை உள்ளது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.
    
சென்னையை அடுத்த மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டி பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இது திருஷ்டி நீக்கும் ஸ்தலமாகும். இங்கு சென்று வழிபடுவதன் மூலம் பொறாமை குணங்கள் மறையும்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து  அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கும் போது உங்கள் வீட்டில் உள்ள தெருப்பார்வைக்கு தீர்வு கிடைக்கும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]