அதிர்ஸ்டகரமான சமையல் அறைகள்

Charming-Modular-Kitchen-Colour-Combination--On-Home-Remodel-Design-with-Modular-Kitchen-Colour-Combination
Charming-Modular-Kitchen-Colour-Combination–On-Home-Remodel-Design-with-Modular-Kitchen-Colour-Combination

Vastu for kitchen

ஒரு இல்லத்தின்  உட்பகுதியில் எந்த பகுதியில் சமையலறை வரவேண்டும். அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை பற்றிய எனது விளக்கத்தை பார்போம். ஒரு வீட்டில் முக்கிய பங்கினை வகிப்பது சமையலறையே ஆகும்.அதனை  ஒரு  வீட்டில் அமைக்கக்கூடிய ஒவ்வொரு இடத்தை பொறுத்தும் அதன் பலன்கள் மாறுபடும்.
ஒரு இல்லத்தில்     தென் கிழக்கு பகுதியில் மட்டுமே சமையலறை வர வேண்டும். சில இடங்களில் தெற்கு பார்த்த இடங்களில் தென்கிழக்கில் இடம் விட்டு சமையல் அறை அமைப்பார்கள், அதுவும் தவறுகள் தான். சமையலறையில்  கிழக்கும் தெற்கும் இருபுறத்தில் உச்சத்தில் ஜன்னல் இருப்பது வாஸ்து அமைப்பில் மிகவும் நல்லது.ஒரு இல்லத்தில் மொத்த இடத்திற்கு வடகிழக்கு பகுதியில் கட்டாயமாக சமையலறை வரக்கூடாது. அப்படி வருகின்ற   பட்சத்தில் அந்த வீட்டில் பல கெடுதலான பலன்களை கொடுத்தே தீரும். குடும்பத்தலைவர் அல்லது தலைமகன் பாதிக்கப்படுவார்.விபத்து ஏற்பட்டால் தலைப்பகுதியில் மட்டுமே ஏற்படும்.தந்தை மகன் உறவு அவர்கள் பிரிந்து இருந்தால் அந்த குடும்பத்திற்கு நல்லது. அப்படி பிரிந்து இல்லாது ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் ஆண்களுக்கு உயிர் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்புகளை கொடுக்கும். சில இடங்களில் குழந்தை பேறுகளில் கூட தடை ஏற்படுத்தும்.

ஒரு இல்லத்தில்  வடமேற்கு பகுதியில் சமையலறை வரும்பட்சத்தில் தாராளமாக இருக்கலாம். இதனால் எந்த தவறுகளும் கிடையாது.  வடமேற்கு சமையலறை இடங்கள் பெரும்பாலும் உணவுவிடுதிகளுக்கு  அல்லது திருமணமண்டப அன்னதான  கூடங்களுக்கு மேலும் சிறப்பை தரும். அதே அமைப்பு ஒரு வீட்டில் நாம் இருக்கும் போது அந்த வீட்டில் உள்ள பெண்கள் எந்நேரமும் சமையலறையிலேயே இருக்கக்கூடிய சூழ்நிலையை கொடுக்கும். ஒரு இல்லத்தில் தென்மேற்கு பகுதியில் சமையலறை எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. அப்படி வருகின்ற போது அந்த வீட்டில் ஆண்களுக்கு ஒருசில பாதிப்புக்களை கட்டாயமாக கொடுக்கும்.கணவன் மனைவி இடையே பிரிவினைகளையும், கருத்து வேறுபாடுகளையும் கொடுக்கும்.மேலும் ஆண்களுக்கு உடல் ரீதியிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

Terrific-Modular-Kitchen-Colour-Combination-On-Trends-Design-Ideas-with-Modular-Kitchen-Colour-Combination,chennaivasthu,
Terrific-Modular-Kitchen-Colour-Combination-On-Trends-Design-Ideas-with-Modular-Kitchen-Colour-Combination,chennaivasthu,

பொருளாதார இழப்பு மற்றும்  கடன் சுமை ஏற்பட்டு பணத்தில் பிரச்சினை உண்டு பண்ணும்.
மேலே  குறிப்பிட்ட இடங்களைத் தவிர வீட்டின் மத்திய பகுதியை ஒட்டிய வடக்குகிழக்கு மத்திய பகுதி  மற்றும், தென்மேற்கு மத்திய பகுதி மற்றும், தென்கிழக்கு மத்திய பகுதி மற்றும், வடமேற்கு மத்திய பகுதி ஆகிய  இடங்கள் உண்டு.  அங்கு சமையலறை வரும்பட்சத்தில் இந்த பலன்கள் மொத்தமாக வேறுபடும். ஆகவே இந்த மாதிரியான இடங்களில் அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் மட்டுமே உங்களுடைய வீட்டு அமைப்பில் உள்ள சமையலறை வாஸ்து பிரச்சினைக்கு தீர்வு  கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)