தொழிற்சாலைகளுக்கு வாஸ்து அமைப்புக்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து

Vastu for factories
Vastu for factories
நமது நாடு பொருளாதார ரீதியாக வலிமை பெறவேண்டும் என்றால் நாம் தொழிற்துறையில் தற்சார்பு பெறவேண்டும்.அதற்கு சுயவளர்ச்சி உடைய தொழிற்ச்சாலைகள் நமது நாட்டிற்கு தேவை.அப்பொழுது மட்டுமே அந்த தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து அப்பகுதி ஒரு முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாறி விடும்.
ஆக ஒரு தொழிற்சாலை மிகசிறந்த அமைப்பில்  இயஙக வேண்டும் என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அத்தொழிற்சிலைகளில் பலவிதமான இன்னல்களை ஏற்படுத்தும்.
ஒருசில தொழிற்சாலைகளில் இருக்கும் வாஸ்து தவறுகள் அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் மனிதர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அமைப்பில் விபத்துக்களை ஏற்படுத்தும். எனது வாஸ்து பயணத்தில் தொழிளாளர்களின் கண் சார்ந்த பாதிப்பை கொடுத்துள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்துள்ளேன்.அங்கு பார்த்தோமானால் கிழக்கு பகுதிகளில் வாஸ்து ரீதியாக பாதிப்பு இருக்கும்.
அதேபோல விபத்து ஏற்பட்டு கால் மற்றும் கைகள் உடைவது போன்ற பாதிப்புக்களையும் ஒரு தொழிற்சாலை தவறாக இருக்கும் போது நடக்கும். அதேபோல பாய்லர் சார்ந்த பகுதிகளில் தவறாக இருக்கும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சார்ந்த தவறான நிகழ்வுகள் கூட நடக்க வாய்ப்பு உண்டு.இதற்கு காரணமாக அத்தொழிற்சாலையின் வடமேற்கு பகுதியில் தவறான வாஸ்து அமைப்புகள் இருக்கும் போது மேற்கூரிய செயல்கள் நடக்க வழிவகுக்கும்.
அதேபோல நன்றாக தொழிற்சாலை இயங்கி கொண்டிருக்கும் போது உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருள் கிடைக்காது தொழிற்சாலை நிற்கும். அதேபோல உற்பத்தி ஆன பொருள் விற்பனை ஆகாது தேங்கும் சூல்நிலையை கொடுக்கும். இதற்கு முழுக்க முழுக்க காரணமாக நொழிற்சாலையின் தென்மேற்கு சார்ந்த விசயம் ஆகும். அங்கு வாஸ்து விதிகளுக்கு மாற்றம் செய்யும் போது மட்டுமே நல்ல மாற்றம் நிகழும்.
ஒரு தொழிற்சாலை வெளி உலகிற்கு நன்றாக இயங்குகிறது ஆனால் அந்த நிறுவன உறுமையாளர்களுக்கு மட்டும் தெரியும் அந்நிறுவனம் அசலில் ஓடிக்கொண்டிருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். மற்றும் பொருள்கள் களவு போகும். அல்லது நிர்வாக சீர்கேடுகள் காரணமாக தவறுகள் மற்றும் திருட்டுக்களும் நடக்கும். இதனால் நிறுவனம் அசலில் இயங்கி வரும்.
ஒரு சில நிறுவனங்களில் பலநபர்கள் கூட்டாளிகளாக இருப்பார்கள். ஆனால் அதில் நிர்வாகம் செய்யும் கூட்டாளி எவ்விதமான கணக்கு வழக்குகளையும் மற்ற கூட்டாளிகளுக்கு கொடுக்காமல் பெரியண்ணன் பாணியில் நிர்வாகம் செய்வார்.மற்ற கூட்டாளிகள் பயந்து கொண்டு நிறுவனத்திற்கு வந்து செல்வார்கள்.இதற்கு முழுக்க முழுக்க வடகிழக்கு சார்ந்த தவறுகள் ஆகும்.
ஆக ஒரு தொழிற்சாலை நன்றாக இயங்க வேண்டும் என்றால் தொழிற்சாலையின் நான்கு மூலைகளும் வாஸ்து அமைப்பிற்கு வந்து விடவேண்டும். என்னைப்பொருத்தவரை எனது ஊரான பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை இருப்பதால் இங்கு ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இருப்பதாலும் எனது ஊரின் அருகில் திருப்பூர் நகரம் இருப்பதாலும் இப்பகுதிகளில் அதிக அளவில் தொழிற்சாலைகளுக்கு வாஸ்து பார்த்துள்ளவன் என்ற அடிப்படையில் இந்த தகவலை இக்கட்டுரை வழியாக உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.
Vastu for factory also applies to mills, industries (both small scale and large scale), manufacturing plants and sheds, etc.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.