வாஸ்துஅமைப்பில் திசைகளின் பலன்கள்

vastu directions,chennaivasthu
vastu directions,chennaivasthu

மனையின் வடகிழக்கு பகுதி.

வீட்டின் வடகிழக்கு பகுதியை ஈசான்யம் என்போம். இதில் பஞ்ச பூதங்களில் தண்ணீர் சம்பந்தப்பட்ட பகுதியாகும். அதனால்தான் இப்பகுதியில் தண்ணீர்தொட்டி அமைப்புகளை மற்றும் போர் மற்றும் கிணறு போன்ற தரைக்குக்கீழ் தண்ணீரை சேமிக்கும் தொட்டியை அமைக்கின்றனர். இதனைத்தவிர இங்கு வேறு அமைப்பை உருவாக்கும் போது வாஸ்துவில் தவறான அமைப்பாகி விடுகிறது.

மனையின் தென்கிழக்கு பகுதி

வீட்டு அமைப்பில் தென்கிழக்கு என்பது அக்னி மூலை என்போம். இந்த பகுதியில் பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு உரிய இடமாகும்.  இப்பகுதியில் சமையலறை மட்டுமே அமைக்க வேண்டும். இதனைத்தவிர வேறு அமைப்புக்கள் வரும்போது வாஸ்து குறையாகி விடும்.

மனையின் தென்மேற்கு பகுதி.

ஒரு வீட்டிற்க்கு தென்மேற்கு பகுதியை கன்னி மூலை அல்லது  அல்லது நைருதி என்று அழைக்கப்படுகிறது. இநனை ஜோதிட அமைப்பில் ராகு பகவானுக்கு உரிய பகுதியாகும். அதனால்தான் இந்த பகுதியில் மூடப்பட்ட இருட்டான அமைப்பாக குடும்பத்தலைவரின் படுக்கைஅறையை அமைக்கிறோம். அதே போல் விலைஉயர்ந்த மற்றும் பணம் சம்பந்தப்பட்ட பொருட்களை வைக்கக்கூடிய இடங்களாக உருவாக்குகிறோம். இதனை மாற்றம் செய்து வேறு அமைப்புகள் வரும்போது மிகபெரிய தவறாகி தீமைகளை செய்யும் இடமாக மாறிவிடும்.

மனை அமைப்பில் வடமேற்கு :

மொத்த இடத்திற்கு வடமேற்கு என்கிற மூலையை வாயு மூலை என்று கூறுவோம். இந்த மூலை பஞ்ச பூதங்களில் காற்றுக்கு உண்டான இடம் ஆகும். அதனால் வாயு சம்பந்தப்பட்  கழிவு நீர் தொட்டி போன்ற அமைப்புகளை இங்கு உருவாக்குகின்றோம்.

 

locker-room,vastu directions,chennaivasthu
locker-room,vastu directions,chennaivasthu

மனையின் மத்திய பகுதி:

பிரம்மம்  என்பது வெறும் வெட்ட வெளியாக ஒன்றும் இல்லாத அமைப்பு ஆகும்.  வீட்டில் உள்ள உள் பகுதியில் உள்ள வெற்றிடத்தை ஆகாயத்தில் இணைத்து நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனாலேயே கூரையை பொருத்த வரையில் ஒரே சமதளமாக அமைய வேண்டும்.அல்லது வடக்கு மற்றும் கிழக்கு சரிவாக மட்டுமே இருத்தல் நலம். மாற்றி இருந்தால் திறந்து இருந்தால் தவறு.வீட்டின் நடுப்பகுதியில் திறந்த அமைப்பு வரும் பட்சத்தில் கெடுதலான பலன்கள் ஏற்படும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)