எட்டு திசைகளின் வாஸ்து விளக்கம்

எட்டு திசைகளின்
வாஸ்து விளக்கத்தில் கிழக்கு திசைபற்றி பார்ப்போம்.

எட்டு திசைகளின் வாஸ்து
எட்டு திசைகளின் வாஸ்து

 

 

 

 

 

 

 

சூரியன் உதிக்கும் திசையை கிழக்கு திசை என்று சொல்லுகின்றோம். பூமியானது சூரியனை மையமாக வைத்து இத்திசை நோக்கியே சுற்றுகின்றது. இதனை நாங்கள் வாஸ்துவை,சூரியனின் சக்தியே வாஸ்து என்கிறோம்.சூரியனின் சக்தியை உணர்ந்த நமது முன்னோர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ‘’சூரிய நமஷ்காரம்’’ செய்யவேண்டும் என்றனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும்.இந்த திசை வாஸ்துவில் என்றும் மூடபட்ட அமைப்பாக இருக்கக்கூடாது.

மேற்கு :

சூரியன் அஸ்தமனம் ஆகக்கூடிய திசை மேற்கு ஆகும். இந்த திசை, பூமி சுற்றும் திசைக்கு எதிர்ப்புறம், இந்த திசைக்கு உரிய ஜோதிட அமைப்பாக திசை தெய்வமாக வருண பகவான் விளங்குகிறார்.

வடக்கு :

சூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் நின்று கொண்டு இருக்கும்போது நமக்கு இடதுகை பக்கம் இந்ததிசை தான் மனித வாழ்வின் முக்கிய திசையாகும்.இங்கு மிகச்சிறந்த அமைப்பில் வாஸ்து விதிகள் பொறுந்தும் அமைப்பாக இருக்க வேண்டும். இந்த திசைக்கு உரிய திசை தெய்வமாக குபேர பகவான் விளங்குகிறார். வாஸ்து சாஸ்திரத்தில் இத்திசை மிக முக்கியமான திசையாக கருதப்படுகின்றது.இங்கு எப்போதும் இடம் அதிகமான அமைப்பில் காலியாக விடவேண்டும்.

தெற்கு :

வடக்கு திசை என்று சொல்ல கூடிய எதிராக உள்ள திசையே தெற்கு ஆகும்.இந்த திசைக்கு உரிய தெய்வமாக’எமதர்மர்’ விளங்குகிறார். இதுவும் மிக முக்கியமான திசையாகும். இங்கு காலி இடங்கள் குறைவாக அமைத்து வீடு கட்டுவது சிறப்பு.

வடகிழக்கு :

வடக்கும், கிழக்கும் இணையும் பகுதியே வடகிழக்கு திசையாகும். இது ஜோதிட முறையில் சாஸ்திரத்தில் ஈசானமூர்த்திக்கு உரிய இடமாகும். இது மிகவும் சக்தி உள்ள இடமாக வாஸ்துவில் கூறப்படுகிறது. இந்த திசை சரியாக ஒர் இல்லத்தில் அமைந்தால் அனைத்து நலன்களூம் குறைவில்லாமல் கிடைக்கும் ஆண்குழந்தைகளூக்கு உள்ளபகுதி,

தென்கிழக்கு :

தெற்க்கும் கிழக்கும் இணையும் பகுதி தென்கிழக்கு திசை. திசை தெய்வமாக. அக்னி பகவான் விளங்குகிறார். ஒரு இல்லத்தில் பெண்கள் நலம், வம்பு, வழக்கு, புகழ், பகைவரால் தொல்லை,மருத்துவ செலவுகள் முதலியவைகள் இந்த பகுதி அமையும் விதத்தை பொருத்தே மனித வாழ்வில் நடக்கும்.

வடமேற்கு :

வடக்கும் மேற்கும் இணையும் பகுதி வடமேற்கு வாயுப்பகுதி, இவ்விடத்தில், வாயு பாகவான். திசை தெய்வமாக விளங்குகிறார். ஒர் இல்லத்தின் உள்ள அமைப்பில் இத்திசையை வைத்து பெண் ஆதிக்கம் உள்ளதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்,
பெண்களின் நலன்! திருமண வாழ்க்கை, குணம், அவர்களின் நடத்தை, குடும்பத்தின் ஒற்றுமை, செல்வத்தின் அமைப்பு, வழக்கு விவகாரங்கள், புகழ் அரசியல் செல்வாக்கு முதலியவை இந்த திசையை வைத்தே நிர்நயம் செய்யப்படுகிறது.

தென்மேற்கு.
தெற்கும் மேற்கும் இணையும் இடம் தென்மேற்கு என்று அழைக்கப்பகிறது. நைருதிக்கு உரியது இந்த மூலை. “நைருதிமூலை” என்று அழைக்கப்படுகிறது. ஈசனிய மூலைக்கு நேர் எதிர் மூலை இது. ஈசான்யம் பிறப்பு என்றால் இத்திசை மரணம். நடக்கும் திசை ஆகும். ஈசான்யம் வரவு என்றால் இது செலவு. ஆகவே ஒரு இல்லத்தில் வருமானம் வந்து அந்த வருமானம் சுபசெலவுகளாக நடக்க வேண்டும் என்றால் ,கட்டாயம் வீட்டில் தென்மேற்கு திசை சரியாக இருக்க வேண்டும் “பொருளாதாரம், ஆண்களின் நடத்தை, அமைதி, வியாபார அமைப்பு, அந்த வீட்டில் ஆண்களின் நிலை, முதலியவை இந்த திசையின் அமைப்பைப் பொருத்தே அவ்வீட்டில் ஆண்களின் வாழ்க்கை அமைகிறது.