எனது வாஸ்து பயணத்தில் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.

vastu colors for home
vastu colors for home

மகிழ்ச்சி வேண்டுமா? நிறைய வேண்டுமா?

ஒரு வீட்டிற்கு எனது வாஸ்து பயணத்தில் அதிர்ஷ்டம் தரும் நிறங்களாக மூன்று நிறங்களை குறிப்பிட்டு சொல்ல முடியும். மின்னும் தங்கநிறம் ஒன்று ,இதற்கு அடுத்த நிறமாக கருமை நிறத்தை சொல்லமுடியும்.மூன்றாவது நிறம் பன்னீர்புஷ்பத்தின் நிறம் சிறப்பானது. இந்த மூன்று நிறங்கள் ஒரு வீட்டிற்கு உபயோகப்படுத்தும் போது ஒரு வீட்டிற்குள் எந்தவிதமான தீயசக்திகளையும் உள்ளே நுழையவீடாது.எனது வாஸ்து பயணத்தில் எதாவதுஒரு விசயதிற்கு என்னைஅழைக்கும் மிகப்பெரிய பணக்காரர் இல்லத்திற்கு பயணப்படும்போது அவர்களின் வீடுகளின் வெளி கதவு பார்த்தால் அவர்களுக்கே தெரியாமல் காரி நிறம் உபயோகித்து இருப்பார்கள்.

இந்த இடத்தில் நீங்கள் உபயோக படுத்தும் துணியின் நிறங்கள் இந்த நிறத்தில் இருக்கும் போதும் அதிர்ஷ்ட நிறங்களாக எடுத்து கொள்ளமுடியும். இந்த நிறங்களின் தன்மையை பற்றிப் பார்ப்போம்.

vastu colors for home
vastu colors for home

மஞ்சள் நிறம் என்றும் அடிப்படையில் உற்சாகமாக இருக்கக்கூடிய,என்றும் நல்ல சிந்தனை சக்தியை தூண்ட கூடிய நிறம் ஆகும். இந்த நிறம் ஒரு மனிதனுக்கு ஆழ்மனதில் இருக்கின்ற சக்தியை வெளிக்கொண்டு வரக்கூடிய நிறம் ஆகும். ஒரு கூட்டத்தில் ஒருவர் மஞ்சள் நிற உடை அணிந்து இருந்தால் அவர்கள் தனியாக பளிச்சென்று தெரிவார்கள்.நாம் பார்க்கும் காட்சிகளிலேயே,உடனே மனிதமூளைக்கு பதிவாகக்கூடிய நிறம் ஆகும். அப்படிப்பட்ட மஞ்சள் நிறத்தில் மிகவும் பொறுந்தக்கிடிய அதிர்ஷ்டம் தரும் நிறமாக காரி நிறம் சிறப்பு.காரிநிற உடையும் மஞ்சள் நிற உடையும் அணிந்து செல்லும் போது நீங்கள் போகக்கூடிய காரியம் வெற்றி பெறும்.

இதற்கு அடுத்த நிறம் பன்னீர் புஷ்ப நிறம் சிறப்பு.எந்த இடத்திலும் இந்த மலர் அதிரஷ்டம் தரக்கிடிய மலராக உள்ளது செல்வத்தின் கடவுளாக உள்ள மகாலட்சுமி தாயார் விரும்பும் மலராக உள்ளது. ஒரு சின்ன பெண்குழந்தை சிறப்பான படிக்க வேண்டும் நல்ல புத்திசாலி குழந்தையாக வளர வேண்டும் என்றால் தினமும்,கஜலட்சுமி அமைப்புள்ள காமாட்சி விளக்கின் கண்ணாடி தரிசனம் இந்த பன்னீர்புஷ்பம் வைத்து வழிபாடு செய்து, கூடவே சந்தன கட்டையால் தேய்த்த சந்தனம் யானையுடன் இருக்கும்,காமாட்சியின்  அம்சத்தில் இருக்கும் மகாலட்சுமிக்கு சார்த்தி இந்த சந்தனத்தை தினமும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இட்டுக்கொள்ளும் போது நல்ல சிறப்பான வாழ்வு வாழமுடியும் அவர்கள் வாழ்நாளில் எந்தவித பணம் சார்ந்த நிகழ்வுகளில் என்றும் தரித்திரம் இருக்காது.

vastu colors for living room
vastu colors for living room

பொதுவாக மஞ்சள் நிறம் இயற்கையாக யார் அதிகம் உபயோகிக்கும் நபர்கள் இயற்கை விரும்பும் நபர்களாக இருப்பார்கள். இவர்கள் தினமும் இந்த நிறம் உபயோகிக்கும் போது இவர்கள் தலைமைபண்பு உள்ளவர்களாக மாறிவிடுவார்கள். இதற்கு அடுத்த நிறமாக கடல்நீலநிறத்தின் நிறமாக உள்ள சங்குபூவின் நிறம் சிறப்பு.நீங்கள் தினமும் ஒரு நிறம் நவகிரக அமைப்பில் ஆடை அணிவதை விடுத்து,சங்குபூவின்நிறமும்,பன்னீர்புஷ்பத்தின் நிறமும்,வெண்தாமரை நிறமும்,மின்னும் சூரியகாந்தி பூவின் நிறமும்,உங்கள் வாழ்நாளில் பயன்படுத்தும்போது, உன்றும் பணத்தில் தண்ணிறைவு உள்ளவர்களாக மாறிவிடமுடியும்.

இனி நமது வீடு சார்ந்த விசயத்திற்கு வருவோம்.வீட்டின் வரவேற்பு அறை வடகிழக்கில் வரும்போதோ,அல்லது வடகிழக்கில் உள்ள அறைகளுக்கு,மஞ்சள் நிறம் மிகுந்த அதிர்ஷ்டம் தரும் நிறம் ஆகும்.இதே மஞ்சள் நிறத்தை மின்னும் மஞ்சள் நிறத்தினை வீட்டின் வெளிப்புற இரும்பு கதவுகளின் பார்டர்களுக்கும்,காஸ்ட் அயர்ன் கிரில் உபோயோகித்து இருந்தால் அதற்கும் காரிநிறத்தையும்,மின்னும் மஞ்சள் நிறத்தையும்  உபயோகித்து அதிர்ஷ்டம் பெறுங்கள்.

vastu colors for home
vastu colors for home

சமயல் அறைக்கு பன்னீர் புஷ்பத்தின் நிறத்தினை அடித்து வீட்டில் என்றும் உணவுக்கு பஞ்சம் இல்லாத என்றும் அணையாத அடுப்பாக இருக்கக்கூடிய அடுப்பங்கறையாக,உங்கள் வீட்டிற்கு பத்துபேர் சொல்லாது வந்தாலும் உணவு உண்ணக்கூடிய இல்லமாக கட்டாயம் இருக்கும் மிகப்பெரிய பாக்கியம் கிடைக்கும்.

ஒரு மனிதனுக்கு மிகவும் சந்தோசம் கொடுக்கக்கூடிய விசயம் என்றால் உண்ணும் உணவிற்கு அடுத்தபடியாக சயனசுகமே ஆகும்.அந்த ஆக ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அழ்ந்து ஆழ்மனது அமைதியாக இருக்கும் தூக்கமாக இருக்க வேண்டும். ஒரு பொருள் உங்களிடம் வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு போகக்கூடாத தன்மை வேண்டும். அதற்கு துணை இருக்கும் ஒரே நிறம்,காரிநிறம் கலந்த சங்குபூவின் நிறம் ஆகும்.அப்படிப்பட்ட நிறம்தான் படுக்கைஅறைக்கும், பணம்வைக்கும் அறைக்கும் உகந்தது ஆகும். 

ஆக  ஆண்பெண் இணைந்த சயன சுகத்திற்கு நிகரான சுகம் எதுவும் கிடையாது,பணத்தில் கிடைக்கும் சந்தோசம் ஒரு மனிதனுக்கு இணை எதுவும் கிடையாது. ஒரு ராஜபோஜனம் என்று சொல்லக்கூடிய சுகம் ஒரு மனிதனுக்கு உணவிற்கு மேலான சுகம் எதுவும் கிடையாது.குழந்தைகள் மூலமே கவலைகளை மறக்ககூடிய சுகம் ஒரு மனிதனுக்கு இணையானது எதுவும் கிடையாது.இதனை உணர்ந்த பேரன்பேத்திகளோடு வாழும் தாத்தா பாட்டிகளை கேட்டு பாருங்கள் தெரியும்.

vastu colors for living room
vastu colors for home

நாமும் நாளுக்கு ஒரு நிறத்தில் நவகிரக அமைப்பில் உடை அணியாமல்,என்றும் காரி நிறம் கலந்த கடல்நிற ஆடையும்,சூரியகாந்தி பூவின் நிறமும், பன்னீர் புஷ்பத்தின் நிறமும்,வெண்தாமரை நிறமும்,வீட்டிற்கும் நமக்கும் அணவித்து ஆழகு பார்த்து வாழுங்கள். உங்களின் வாழ்நாள் வாழ்க்கை லகுவாக தோன்றும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)