வாஸ்து மட்டும் பார்த்து விட்டு மனையடி வாஸ்து சாஸ்திர ஆயாதி பொருத்தம் இல்லாமல் வீடு கட்டலாமா?

ayadi calculations
ayadi calculations

வாஸ்துவும்,

மனையடி சாஸ்திர ஆயாதி கணிதமும்,

      மனித வாழ்வில் அனைத்து தேவைகளும் நமக்கு குறைவின்றி கிடைக்க வேண்டும் என்றால் ஒரு வீடு அனைத்து விசயங்களிலும் குறைவின்றி இல்லாமல் இருக்கும் போது மட்டுமே கிடைக்கும்.

 

 

ஏற்கனவே நான் நமது தமிழர்கள் மறந்து போன வாஸ்துகலையான மனையடி சாஸ்திர கலையைப்பற்றி கூறி வருகிறேன். அந்த வகையில் இன்று மனையடி சாஸ்திரத்தின் சோடச பொருத்தம் ஒரு வீட்டிற்கு இருந்தால் என்ன பலன் என்பது பற்றி பார்ப்போம்.        
முதல் பொருத்தமான கர்பப் பொருத்தத்தின் பலன்களை உங்களுக்காக வழங்குகின்றேன். ஒரு வீட்டில் கர்பம் என்பது மிகமிக முக்கியம் ஆகும். இந்த இடத்தில் கர்ப்பம் என்பது நமது பழந்தமிழர் உபயோகித்த வார்த்தையின் அடிப்படையில் தங்குதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொருத்தம் ஒரு இல்லத்தில் இல்லை என்றால் அவர்கள் அந்த வீட்டில் தங்க முடியாது. அப்படியே தங்கினாலும்,அவர்களின் வாரிசுகளோ அல்லது குடும்பத்தலைவர்களோ அந்த இல்லத்தில் இருந்து பிரிந்து இருக்கும் சூல்நிலையை அந்த வீடு உறுவாக்கி விடும்.
கர்பப்பொருத்தம் என்றவகையில் எட்டு வகையான பொருத்தங்கள் உண்டு. அதன் ஒவ்வொரு பலன்களைப் பற்றி பார்ப்போம்.
1.முதல் பொருத்தம் ஒருவர் கட்டக்கூடிய இல்லத்திற்கு பொருந்திவரும்போதுஅந்த வீடு நல்லபடியாக வேலைகள் முடிந்து அந்த வீட்டில் குடியேறி நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.
2.இரண்டவது பொருத்தத்தின் அடிப்படையில் அந்த இல்லம் இருக்கும் போது பெரிய வளர்ச்சி அந்த இல்லத்தில் பார்க்க முடியாது. அதனால் இரண்டாவது பொருத்தம் வாராத அமைப்பில் மனையை அடி அளவுகளில் மாற்றி அமைக்க வேண்டும்.
3.மூன்றாவது பொருத்தம் அனைவருக்கும் பொருந்தாது. இந்த பொருத்த அமைப்பில் இல்லத்தை ஒருவர் பக்கத்தில் எந்த வீடுகளும் இல்லாமல் விவசாயம் செய்யக்கூடிய இடங்களில் வீடுகட்டுபவர்கள் உபயோக படுத்தும் போது மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்வார்கள்.
4.தவிர்க்க வேண்டும்.மனை அமைக்க கூடாது.
5.மிகவும் சிறந்த பொருத்தம் ஆகும்.கட்டாயமாக இந்த பொருத்தம் அரசியல் சார்ந்த பொறுப்பை வகிப்பவர்களின் இல்லம் இருக்கும் போது அனைவரும் இவர்களுக்கு வசியம் ஆவார்கள். எனது வாஸ்து பயணத்தில் அரசியல் சார்ந்த நபர்களுக்கு இந்த பொருத்தம் கூடிவரும் அமைப்பில் இல்லங்களை அமைத்து கொடுக்கின்றேன்.
6.இந்த பொருத்தத்தையும் தவிர்க்க வேண்டும். இந்த பொருத்தம் குடிசை அமைப்பில் ஒரு இல்லத்தை அமைக்கின்றனர் என்றால் ஏற்படுத்தி கொள்ளலாம்.இன்றைய அமைப்பில் மாடிவீடு கட்டுகின்றோம் என்றால் வேண்டாம்.
7.ஏழாவது பொருத்தம் மிக அற்புதமானது ஆகும். இது வியாபாரம் செய்யும் மக்கள் உபயோகிக்கும் போது ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.
8.எட்டாவது பொருத்தம் இருக்கும் அமைப்பில் என்றும் வீடு கட்ட வேண்டாம்.

 

இந்த இடத்தில் எனது வாஸ்து பயணத்தில் இந்த எட்டாவது பொருத்தம் இருக்கும் அமைப்பில் வீட்டினை கட்டி  இரண்டு வருடங்கள் ஆகியும் அந்த வீட்டிற்கு குடிபுகும் சூல்நிலை இல்லாது இருக்கின்றனர். ஒருசில வீடுகளில் வேலைகள் முடியாது இருக்கிறது.

 

ஆயாதி கணிதம்
ஆயாதி கணிதம்

ஆக வாஸ்து மட்டும் பார்த்துவிட்டு சோடச மனையடி மனைப்பொருத்தம் இல்லாமல் எக்காரணம் கொண்டும் ஒரு வீட்டினை அமைத்து சிரமப்படும் வாழ்க்கை வாழ வேண்டாம்.அடுத்த பதிவினில் வீட்டின் வருமானம் சார்ந்த பொருத்தத்தை பார்ப்போம்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)