மிகச்சிறந்த அமைப்பில் தெற்கு பார்த்த மனை

வாஸ்துவில் தெற்கு பார்த்த மனை
வாஸ்துவில் தெற்கு பார்த்த மனை

வாஸ்துவில் சிறப்பு தகவல்கள்.


வாஸ்துவில் சிறப்பு தகவல்கள் எனும்போது வடக்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால் மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளுக்கு சொல்ல வேண்டும்.அந்தவகையில் தெற்கு பார்த்த வீடுகளின் வாஸ்து அமைப்பினைப் பற்றி பார்ப்போம்.தெற்கு புறத்தின் எதிர்திசை அமைப்பில் ஒரு இல்லத்தை அமைக்கும் போது எளிதாக வாஸ்து அமைப்புக்களை கொண்டு வந்து விட முடியும். ஆனால் தெற்கு பார்த்த மனைகளை அமைக்கும் போது கட்டாயமாக ஒரு வாஸ்து நிபுணரின் துணைகொண்டு அமைக்கும் போது மட்டுமே சிறப்பான இல்லமாக அமைக்க முடியும்.


இப்படிப்பட்ட இல்லங்களை அமைக்கின்ற மக்கள் தென்கிழக்கில் வாகனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தென்கிழக்கில் வீட்டின் கார்பெட் இடத்தை காலியாக விட்டு விடுவார்கள். ஆக மேற்கு புறத்திற்கு காலி இடம் இருந்து நல்லது தான்.ஆனால் ஈசானம் எடையாகி வேறுவிதமாக தவறான பலன்களை கொடுக்கும் இல்லமாக மாறி விடும்.


ஒரு சில இடங்களில் தெற்கு பகுதியில் அதிக இடங்களாக விட்டு போர்ட்டிக்கோ அமைப்பை ஏற்படுத்துவார்கள்.ஆக வீட்டில் போர்டிக்கோ என்பதே தவறாக இருந்தாலும், அது வடக்கு பார்த்த வீடுகளுக்கு வேண்டுமானால் இருந்து விட்டு போகட்டும் என்று விடலாமே தவிர தெற்கு பகுதியில் இருப்பது என்பது மிகவும் தவறு.அதுவும் அந்த போர்டிக்கோ மேல்தளம் தாழ்த்தப்பட்ட அமைப்பாக இருந்துவிட்டால் மிகவும் மோசமான தவறு ஆகும். அதாவது உயர்ந்த அமைப்பில் இருக்கும் போது அங்கு ஒரு அறைகளை ஏற்படுத்தி வாஸ்து விதிகளுக்கு எளிதாக கொண்டு வந்து விட முடியும். இல்லையெனில் அந்த போர்ட்டிக்கோவை இடிப்பதை தவிர வேறு வழிகள் கிடையாது.

ஆக தெற்கு பார்த்த வீடுகளை அமைக்கும் போது சர்வ கவனத்தை செலுத்தி கட்டிடங்களை கட்டும் போது,மிகப்பெரிய வாழ்க்கை வாழ முடியும்.என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய வாழ்க்கை தற்போது வாழ்பவர்கள் அதிக பட்சமாக ஒரு காலகட்டத்தில் தெற்கு பார்த்த வீட்டில் வசித்தவர்களே.ஆக ஒரு வாஸ்து நிபுணரின் துணை கொண்டு மிகச்சிறந்த அமைப்பில் தெற்கு பார்த்த மனைகளை அமைக்கும் போது அற்புதமான வாழ்க்கை வாழமுடியும்.


FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்துவில் செய்வினை
வாஸ்துவில் செய்வினை

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]