வாஸ்து மூலமாக கணவன் மனைவி பிரிவுகளுக்கு தீர்வு.

husband-wife-dispute-solution
husband-wife-dispute-solution

கணவன்

மனைவி உறவுகளில் வாஸ்து

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆயிரம் காலத்து பந்தமாக  இணைந்த இருமணம் கொண்டவர்கள் ஒருமணமாக இணைவதே திருமணம் ஆகும்.அப்படி பெரியோர் செய்து வைத்த திருமணத்தில் எத்தனையோ கடவுளின் துணைகொண்டு செய்யக்கூடிய திருமணத்தில் பிரிவுகள் வருகிறது என்றால் நீங்கள் வேண்டுமானால் இது கர்மா நேரம் சரியில்லை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.ஆனால் நான் அதனை மறுப்பேன்.ஏனென்றால் இது எல்லாமே ஒரு வீட்டின் வாஸ்து குற்றங்கள் தான் இயக்குகின்றது. ஆனால் வாஸ்துவிற்கு வெளியே உள்ள மக்கள் இதனை நம்புவதுதில்லை.
நமது இந்திய சமூகம் காலம்காலமாக கூட்டுக்குடும்பமாகவே இருந்து வந்துள்ளது.  தற்போது சுமார் நாற்பது வருடங்களாக கூட்டுக்குடும்பம் என்பது சிதைந்து விட்டது. எப்பொழுது பணத்தை நோக்கிய பயணத்தில் மனிதன் கவனம் செலுத்தினானோ அன்றே கூட்டுக்குடும்ப உறவுகளும் சிதைந்து விட்டது.  இன்றைய உறவில் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவன் மட்டுமே. அந்தகாலத்தில் கணவன் மனைவி உறவு என்பது பகலில் மற்ற உறவுகளோடுதான் இருப்பார்கள் இரவு படுக்க போகும் மட்டுமே கணவன் மனைவி இணைந்து இருப்பார்கள். ஆனால் இன்று 24 மணி நேரமும் தொடரும் இதனாலேயே சில இடங்களில் சண்டை சச்சரவு ஏற்படும் இதனை மீண்டும் இணைக்க விடாமல் தடுப்பது ஒரு வீட்டின் வாஸ்து குற்றங்களே.
ஒருவரின் நேரம் காலம் பொறுத்து கணவன் மனைவி பிரிவில் பலவகையான பிரிவுகளை ஏற்படுத்தும்.
 வேலைக்காக வெளியூர் போய்தங்கி இருத்தல்  வருடத்தில் இரண்டு மூன்று முறைகள் மட்டுமே வீட்டுக்கு வருதல். இப்படி இருக்கும் கணவன் மனைவி உறவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனாலும் அதற்காக அப்படியே வாழ வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்று வழக்கு வகையில் வருட கணக்கில் அனைத்து வேலைகளையும் விட்டு நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டு இருப்பது.
 கணவன் மனைவி இருவருமே சேர்ந்து விவாகரத்து கேட்கும்போது உடனடியாக கிடைத்து பிரிந்து விடுதல் அவர்கள் நினைப்பார்கள் எந்த சாமி புன்னியமோ உடனே எங்களை  பிரித்து விட்டது என்று. நான் சொல்வேன் இந்த இடத்தில் உங்களை பிரித்து பார்த்தது உங்களின் வீடு மட்டுமே.எந்த சாமியும் உங்களைபிரிக்கவில்லை என்று,

 

 

Vastu in relationships with husband and wife
Vastu in relationships with husband and wife

இதைவிட சில இடங்களில் வாஸ்து கொஞ்சம் விஸ்வரூபம் எடுத்து வேலைகளை செய்யும், அதாவது கணவன் மனைவிக்குள்  பிரிவு , யாரோ ஒருவரை நிரந்தரமாக பிரித்து விடுவது அதாவது இறப்பினை ஏற்படுத்துதல்.
குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டுக்கு வந்த மனைவி தனது கணவன் தனக்கு பிடிக்க வில்லை என்று கணவன் வீடு திரும்ப வருவதில்லை.இப்படிப்பட்ட பிரிவுகளையும் ஒரு தவறான வீடு அளிக்கும். 
 கணவன் மனைவி சார்ந்த இத்தனை பிரிவுகளுக்கும்  ஒருவர் வசிக்க்கும் வீடே காரணம் ஆகும். ஒரு  வீட்டின் தவறான அமைப்புகள்தான் இந்த வேலைகளை செய்யும்.
இந்த மாதிரியான பிரிவினைக்கு துணைபோகும் காரணங்கள் பற்றி பார்ப்போம்

Vastu in relationships with husband and wife
Vastu in relationships with husband and wife

தென்மேற்கு  படுக்கை அறை இல்லாமல் இல்லம் இருப்பது அல்லது இருந்தும் காலியாக விட்டு பூஜை அறைகளை ஏற்படுத்துதல். அல்லது சமையலறை கழிவறை போன்ற அமைப்புகளாக இருப்பது.தென்மேற்கு பகுதியில் வீட்டை விட்டு வெளியே செல்லும் வழி ஏற்படுத்துவது,தென்மேற்கு தெரு பார்வை இருந்து ஆண்களை அதிகபடுத்துவது என்ற பெயரில் பெண்களை குறைக்கும் செயலை செய்யும்.இப்படி பல கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் மேற்கூரிய காரணங்கள் விரைவாக வேலை செய்யும். 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)