வாஸ்துவின் முக்கிய விதிகள்

வாஸ்துவின் முக்கிய விதிகள்.

Important rules of vestu
Important rules of vestu

 

 

 

 

 

 

 

இல்லத்தின் அமைப்பு சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். இது வீடு மற்றும் சுற்றுச்சுவருக்கும் பொருந்தும்.

வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.அது வாஸ்து விதிகளுக்கு உகந்தது.

மழைநீர் வெளியேறக்கூடிய வழி, ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும்.

ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது என்று ஒருசில வாஸ்து நிபுணர்கள் சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை தவறு.

வீட்டிக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு பகுதிகளில் மலை, குன்று இருப்பது மிகவும் நல்லது.

இல்லத்தின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது மிகவும் நல்லது.

வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில்
கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும்.வடமேற்கில் கழிவுநீர் தொட்டியை எடுத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து கட்டும் கட்டிடத்திற்கு பயன்படுத்துவார்கள் இது வாஸ்து அமைப்பில் தவறு ஆகும்.

இல்லத்தின் மத்தியிலும் வேறு திசைகளில் அமையும் ஆள்துளைகினறு, மற்றும் பம்ப்செட் தவறான பலன்களைத் கொடுக்கும்.

இல்லத்தின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில்
அதிக இடங்களாக இருக்கும் அமைப்பில் வீடு கட்ட வேண்டும்.

புதிய இல்லத்தை அமைக்க வேலை தொடங்க கடைக்கால் தோண்டும்போது முதலில் ஈசானியத்தில்
ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும்.

வீடு கட்டும் பணி என்பது முதலில் தென்மேற்கில் ஆரம்
பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

தென்மேற்கு மூலை 90 டிகிரி மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. நான்கு மூலைகளும் 90 டிகிரிக்கு இருக்க வேண்டும்.

இல்லத்தின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு,தாழ்ந்த அமைப்பாக இருக்க வேண்டும்.இதில் ஆங்கில எழுத்தின் Z அமைப்பாக இருக்க வேண்டும்.

பஞ்சபூத ஆற்றல் கிடைக்க தடையின்றி ஒரு இல்லத்திற்கு கிடைக்க வடகிழக்கில் தாழ்ந்த அமைப்பு மற்றும்,மற்ற அனைத்து காலி இடங்களை விட இப்பகுதியில் மிக அதிக அளவில் காலியாக இருக்க
வேண்டும்.

இல்லத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள்
அமையவேண்டும்.

கட்டாயமாக இல்லம் ஆயாதி கணித வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும்.அதாவது மனையடி பொருந்தி வரவேண்டும்.