thulam rasi guru peyarchi 2021 to 2022 | துலாம் குரு பெயர்ச்சி

கும்ப ராசிக்கு பயணப்படும் குருபகவானின் குருபெயர்ச்சிபலன்கள் வரிசையில் துலாம் ராசிக்கான பலாபலன்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இந்த குரு பெயர்ச்சி என்பது இதுவரை நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போது 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவது அதி அற்புதமான பலன்களை கொடுப்பார் . சனிபகவான்  சார்ந்த ராசியில் அதன்  தாக்கம் என்பது நான்காம் இடம் சார்ந்த கெடுபலன்களை கொடுத்தாலும், ஐந்தில் குரு வருவது என்பது மிக மிக அதி அற்புத பலன்களை வழங்குவார்கள் என்பது நிச்சயம். குடும்ப  விவகாரங்கள், குடும்ப கடன், குடும்ப கஷ்டம் அதனை வெளியில் எங்கும் பேசாமல், சொல்லாமல், இருப்பது நல்லது. இதற்கு காரணம் சனியின் தாக்கத்தால் குரு நல்ல நிலையில் இருந்தாலும், ஒரு தவறான பலனைக் கொடுக்கக்கூடிய நிகழ்வாக அமைந்து விடும். அதேபோல இந்த காலகட்டங்களில், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்க வாய்ப்பு, குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் நல்ல கல்வி கிடைக்கக்கூடியநிலை, குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் வயது வந்த குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும் ஒரு நிகழ்வுகள், சுபநிகழ்ச்சி காண வாய்ப்புகள் கூட நிச்சயமாக உருவாகும்.

கணவன் மனைவி உறவை பொருத்த அளவில் நல்ல பலன்களை அன்னியோன்யத்தை கொடுக்கக்கூடிய குருபெயர்ச்சி ஆக இந்த பெயர்ச்சி இருக்கும். தொழில் சார்ந்த நிகழ்வுகளில் நீங்கள் முதலாளியாக இருந்தாலும் சரி அல்லது, வேலைக்குச் செல்கின்ற மனிதராக இருந்தாலும் சரி, பணிச்சுமை என்பது அதிகமாகத்தான் இருக்கும். அதேபோல பதவி உயர்வு என்கிற விஷயத்தில், ஊரை மாற்றுகின்ற ஒரு நிகழ்வு கூட கண்டிப்பாக இருக்கும். ஏன் சிலருக்கு வெளிநாடு வேலை சார்ந்த நிகழ்வுகள் கூட மாற்றம் என்பது இருக்கும். ஆக இந்த மாற்றத்தை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வது நல்லது. வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற துறை சார்ந்த நிகழ்வுகளில்,மற்றும் அது சார்ந்த சுய வேலை செய்கிற மக்கள் மிகப்பெரிய வெற்றியைக் காண்பார்கள். சுயதொழில் எனும்போது குறிப்பாக தையல் கலைஞர்கள், சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்த மக்கள், கட்டிடம் சார்ந்த பொறியாளர் துறை சார்ந்த மக்கள், நல்ல ஒரு லாபத்தை சந்திக்கக் கூடிய மக்களாக இருப்பார்கள். ரெகுலராக வியாழக்கிழமை விரதம் இருந்து பிரகஸ்பதி என்று சொல்லக்கூடிய தேவ குருவை வணங்கி வரும் பொழுது நல்ல அற்புதமான பலன்கள் இரட்டிப்பாகும் கிடைப்பது நிச்சயம்.