வாஸ்து ரீதியாக பலன்தரும் ஆலயங்கள்

ஆழித் தேர்
ஆழித் தேர்

திருவாரூர் தியாகராஜர் ஆலயம்

நாம் இந்த உலகில் வாழும் போது ஒவ்வொரு நிகழ்வினில் இறைவனால் முக்தி அளிக்கப்படுகின்றது.அந்த வகையில் சிவபெருமான் மூலமாக நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு விசயம் என்னவெனில் திருவாருரில் பிறந்தால் முக்தி என்பதாகும். அந்த வகையில் தமிழகத்தின் ஆலய முக்கிய நிகழ்வு ஒன்று என்னவெனில்

 திருவாருர் தேர்திருவிழாவும்,அந்த நிகழ்வு முடிந்த பிறகு இறைவன் ஆலயத்தில் உள் செல்லும் நிகழ்வினில் அவர் செய்யும் அஜபா நடனம் என்பது மிக அற்புதமானது ஆகும். எப்படி சுந்தரர் பெருமானுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தாரோ அதுபோல நமக்கும் அனைத்து போகங்களையும் வழங்கக்கூடிய நிகழ்வே ஆகும்.
இக்கோயில் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் உள்ள ஆலயம் இதுவே.இந்த தேர் ஆழி  என்று சொல்லக்கூடிய உலகிலேயே மிகவும் அகலமான அற்புத அழகான தேராகும்.
 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. “திருவாரூர் தேரழகு” என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.இது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை இந்த நிகழ்ச்சி நடக்கும்.
ஆலய சிறப்பு:

அதிக தேவார பாடல்கள் கொண்ட தலம் இதுவே.நால்வர் பெருமக்களும் இந்த ஆலய இறைவனை பதிகத்தால் பாடியுள்ளனர்.
லலிதா சகஸ்ரநாமத்தின் அடிப்படையில் அம்பிகை தோன்றினாள் அந்த வகையில் இங்கு உள்ள குளம் கமலாலயம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி உத்திரம் அன்று கமலாலய குளத்தில் நீராடும் போது 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமக குளத்தில் நீராடினால் என்ன பலனோ அந்த பலன் கிடைக்கும்.

thiruvarur temple vastu
thiruvarur temple vastu

இங்கு உள்ள கமலாம்பிகை ஒரு மகாராணி போல வீற்று இருக்கின்றாள்.உங்கள் வாழ்வு அடுத்த கட்டம் பயணம் வேண்டும் என்றால் எப்பவெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்பவெல்லாம் அம்பிகையை பார்த்து வாருங்கள் அவளை போல ஒரு ராஜ வாழ்வு கிடைக்கும். இது உண்மை இதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த ஆலயம் வாஸ்து பரிகார தளமாக உள்ளது.உங்கள் வீட்டில் ஒருசில வாஸ்து பிரசனைகள் இருந்தால் அங்கு சென்றுவரும்போது அந்த பாதிப்புகளில் இருந்து வெளியே வர முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)