மூலை குத்தல் வீடுகள்

north east corner vastu
north east corner vastu

தவறான பலன்களை கொடுக்கும் மனைகள்

தெருப்பார்வையோ, தெருக்குத்தலோ, என்பது நான்கு நல்லது என்றும், நான்கு கெடுதலான பலன்களை கொடுக்கக்கூடிய அமைப்புகளாக வாஸ்து அமைப்பில் இருக்கிறது.அதிலும் எந்த மூலைக்கும் பொருந்தாது மூலையின் நடுமையத்தில் வருவது மிகதவறு.

இதனை யார் வேண்டுமானாலும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.அதுவே ஒரு மூலைக்குத்தல் அமைப்பில் வரும் போது ஒரு  வாஸ்து புத்தகம் படித்து அறிந்து கொள்ள முடியாது .இந்த இடத்தில் வாஸ்து அனுபவங்கள் மூலம் அந்த மாதிரி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் எந்த மாதிரியான வாழ்வு வாழ்கிறார்கள் என்பதனை ஆராய்ந்து மட்டுமே அதற்கு தீர்வு கொடுக்க முடியும்.

மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ள அமைப்பில் நான்கு மூலைகளில் எதாவது  ஒருபக்கமோ அல்லது இரண்டு பக்கங்களிலோ தெருக்கள் வந்து மோதுவது என்பது இரண்டு விதமான பலன்களை கொடுக்கும்.

1.வடகிழக்கு மூலைகுத்து.

 அந்தவகையில் வடகிழக்கு பகுதியின் மூலையை குத்தும் அமைப்பில் இருந்தால் மிக அற்புதமான பலன்களை தரும்.மிகமுக்கியமாக அந்த வீட்டை கட்டுகின்ற குடும்ப தலைவர் தன் வாழ்நாளில் எதற்காகவும்,யாரிடமும் நிற்கக்கூடிய அமைப்பை தராது.எப்படி நீர் பள்ளத்தைப்பார்த்து பாய்கின்றதோ அதுபோல வளமான வாழ்க்கை அமையும்.

2.தென்கிழக்கு அக்னி மூலைகுத்து.

இந்த குத்து என்பது மிகமிக தவறு .நீங்கள் நினைக்கலாம் தெற்கில் இருந்து வரும் குத்தும் சேர்ந்து  உள்ளதே என்று.இந்த இடத்தில் இது ஒரு வருடமோ அல்லது எட்டு வருடங்களோ நல்லதை கொடுத்து விட்டு தவறான பலன்களை கொடுக்கும். இதன் பாதிப்பு நெருப்பினால் கண்டம்.மற்றும் காவல்துறை குற்றம் ஏற்படுதல் போன்ற விசயங்களில் பாதிப்பு ஏற்படுத்தும். மேலும் குழந்தை பேறு தடை ஏற்படுத்தும்.

3.வடமேற்கு வாயு  குத்தல்.

இது குறிப்பாக 7வருடங்களில் இருந்து 11வருடங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கும். அதற்கு பிறகு காற்று திசைமாறி அடிப்பது போல அப்படியே தவறான பலன்களை திருப்பி கொடுக்கும்.இந்த இடத்தில் நிறைய வீடுகளை நான் பார்த்துள்ளேன்.இந்த இடத்தில் வடக்கு வீடாக இருக்கும் ஆனால் மேற்கு வீதிக்கு ஒட்டியுள்ள வீடாக இருக்கும். அதற்குவடமேற்கு மூலைக்குத்தல் அமைந்து விடும்.குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அது கெடுதலான பலன்களை கொடுக்க தொடங்கும்.

4.தென்மேற்கு நைருதிமூலைக்குத்து.

இந்த அமைப்பில் குத்தல் இருந்தால் மிகமிக தவறு ஏன் என்றால் வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலை குத்தல்களைக்கூட ஒருவகையில் எடுத்து கொள்ளலாம். ஏன் என்றால் ஒரு குறிப்பிட்ட காலம் நல்லது நடத்தி விட்டு தான் தவறுகளை கொடுக்கும். அதற்குள்ளாகவோ அல்லது அவர்கள் நேரம் நன்றாக இருந்தால் எந்த வீடு விட்டு வேலை வாய்ப்பு மற்றும் வியாபாரம் என்ற அமைப்பில் வேறு இடங்ளுக்கு சென்று விடுவார்கள்.இதில் ஒருவர் வாழ்ந்து தப்பிப்பது என்பது கடினம்.என்ன இந்த இடத்தில் ஆயாதி கணிதம் பொருந்தி இருந்தால் ஒரு குறிப்பிட்ட நபர்கள் துணையோடு கொஞ்ச காலம் நன்றாக வாழவைக்கும். இதில் வசிப்பது என்பதும்,    நேராக சுடுகாட்டில் கொட்டகை அமைத்து வாழ்வதும் ஒன்றே.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து,பிரமஸ்தான வாஸ்து,
நமது பழந்தமிழர்களின் ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
[email protected]

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

street focus remedies
street focus remedies